Chennai Shocker: குடிப்பழக்கத்தை கண்டித்த 5 மாத கர்ப்பிணி மனைவி எரித்துக்கொலை; கை-கால்களை உடைத்து காதல் கணவன் வெறிச்செயல்.!

வீட்டிற்குள் இருந்த கர்ப்பிணி பெண் நந்தினி திடீரென அலறிய நிலையில், அக்கம் பக்கத்தினர் உடல் கருகிய நிலையில் அவரை மீட்டனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் காதல் கணவனின் கொடூர செயல் அம்பலமானது.

Pregnant Women | Girl Fire Both File Pic (Photo Credit: Pixabay)

அக்டோபர் 13, மறைமலைநகர் (Chennai News): சென்னையில் உள்ள மறைமலைநகர் (Maraimalai Nagar, Chennai) பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரின் மனைவி நந்தினி. தம்பதிகள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.

இருவருக்கும் ஒரு குழந்தை இருக்கும் நிலையில், தற்போது நந்தினி இரண்டாவதாக ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கிறார். மதுபோதைக்கு அடிமையான ராஜ்குமார், எப்போதும் குடிபோதையில் இருந்து வருவது வாடிக்கை என கூறப்படுகிறது.

இதனால் தம்பதிகளிடையே அவ்வப்போது குடும்பத்தகராறு, சண்டை ஆகியவை ஏற்பட்டு வந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று நந்தினி அபயக்குரலில் அலறி இருக்கிறார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, நந்தினி உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடியவாறு மீட்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார்.

உடல் முழுவதும் தீயில் கருகி 90% தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நந்தினி, காவல் துறையினரிடம் கணவரின் கொடூர செயல் குறித்து வாக்குமூலம் அளித்தார். Theni Shocker: மகனின் குறைந்தபட்ச ஆசையை நிறைவேற்றாத பெற்றோர்: 15 வயது சிறுவனின் விபரீத முடிவால் சோகம்.! கடிதத்தில் அதிர்ச்சி தகவல்.! 

அதாவது, சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த கணவரிடம், குடிப்பழக்கம் தொடர்பாக நந்தினி வழக்கமான முறையில் கண்டித்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார், மதுபோதையில் மனைவியை கடுமையாக தாக்கி இருக்கிறார்.

மேலும், அவரின் கை-கால்களை உடைத்து, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொளுத்தி இருக்கிறார். பின்னர், முதல் குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

இந்த தகவலை தெரிவித்த சில நொடிகளிலேயே நந்தினி பரிதாபமாக அதிகாரிகள் முன்பு மரணமடைந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.

மேலும், நந்தினியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவரின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தையோடு தலைமறைவான ராஜ்குமாருக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement