அக்டோபர் 13, போடி (Theni News): தேனி மாவட்டத்தில் உள்ள போடி, கீழத்தெரு, பேச்சியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். இவரின் மனைவி ஜெயா. தம்பதிகளுக்கு முத்து, பாலாஜி என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

ராமகிருஷ்ணன் கூலித்தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். ஜெயா அங்குள்ள ஏலக்காய் கடைக்கு வேலைக்கு சென்று வருகிறார். இருவரின் வருமானத்தில் குடும்பம் நடத்தப்பட்டுள்ளது. இளையமகன் பாலாஜிக்கு இரயில் என்றால் கொள்ளை பிரியம் என கூறப்படுகிறது.

இதனால் போடியில் இரயில்வே பணிகள் தொடங்கிய நாட்களில் இருந்து பள்ளிக்கு கூட சரிவர செல்லாமல், நண்பர்களுடன் எப்போதும் போடி இயல் நிலையத்தை குட்டிபோட்ட பூனை போல சுற்றி வைத்துள்ளார். இரயில்வே பணிகள் நிறைவுபெற்றதும், இரயிலில் பயணிகள் பல இடங்களுக்கு வந்து சென்று இருக்கின்றனர். Lal Salaam TN Release: லால் ஸலாம் படத்தின் தமிழ்நாடு வெளியீடு உரிமைகளை கைப்பற்றியது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

பலரும் தங்களின் குடும்பம், குழந்தைகள், உறவினர்கள் என பயணித்துள்ளனர். அலுவல் ரீதியாகவும் தினமும் பலர் போடி இரயில் நிலையத்தில் இருந்து இரயில் பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனைக்கண்டு வெதும்பிய சிறுவன், தன்னையும் பெற்றோர் இரயில் பயணம் அழைத்து செல்ல கோரிக்கை வைத்துள்ளார்.

Suicide Victim Note (Photo Credit: Twitter)

இரயிலில் சென்னை, மதுரை சென்று வரலாம் என பெற்றோரிடம் பலமுறை சிறுவன் கோரிக்கை வைத்து வற்புறுத்தி வந்துள்ளார். பள்ளிக்கும் சரிவர செல்லாமல் இரயில் நிலையத்தில் இரயில் பயணமே கதி என சிறுவன் இருந்துள்ளார். பெற்றோர் வருமானத்திற்காக தினம் கலி வேலைக்கு சென்றுவிடுகின்றனர்.

மகனின் தவிப்பை பெற்றோர் உணராத நிலையில், கடந்த 09ம் தேதி பாலாஜி தான் இரயில் மீது கொண்ட ஏக்கத்தினை கடிதமாக எழுதிவைத்துவிட்டு, அண்ணனை மட்டுமாவது நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். Gangajal GST Exempted: பூஜைக்கு பயன்படுத்தப்படும் கங்கை நீருக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது – அதிகாரபூர்வ அறிவிப்பு.!

மாலை சுமார் 04:00 மணிக்கு மேல் ஏலக்காய் கடையில் இருந்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தாய் ஜெயா, மகன் உத்திரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார்.

தகவல் அறிந்த போடி நகர காவல் துறையினர், பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சிறுவனின் ஆசையை பெற்றோர் நிறைவேற்றாத காரணத்தால், சிறுவன் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. நாள்தோறும் கூலிவேலைக்கு சென்றுவரும் பெற்றோர் மகனை சரிவர கவனிக்க இயலாத நிலையில், பெற்றோரின் நிலையையும் சிறுவன் புரிந்துகொள்ளவில்லை. தனது ஆசை நிறைவேறாமல் தொடர்ந்ததால், சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.