Presidency College: கல்லூரி மாணவர் கொலை விவகாரம்; மாநிலக்கல்லூரிக்கு 6 நாட்கள் விடுமுறை., முதல்வர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள பதற்ற சூழலை கட்டுப்படுத்த, கல்லூரிக்கு வரும் 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 09, சேப்பாக்கம் (Chennai News): சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில், கடந்த அக்.04ம் தேதி மாநிலக்கல்லூரியில் பிஏ அரசியல் துறையில் பயின்று வரும் மாணவர் சுந்தர், பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் 6 பேரால் கடுமையாக தாக்கப்பட்டார். தொடர்ந்து 5 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சையில் இருந்த சுந்தர், இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடல் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
6 நாட்கள் விடுமுறை:
பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர் தாக்கியதில் மாநிலக்கல்லூரி மாணவர் உயிரிழந்த காரணத்தால், மேற்படி மாணவர்கள் தாக்குதல் சம்பவத்தில் களமிறங்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனை இரண்டு கல்லூரிகளுக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், மாநிலக்கல்லூரிக்கு வரும் 6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படுவதாக, அக்கல்லூரியின் முதல்வர் ராமன் தெரிவித்துள்ளார். Weekend Special Bus: ஆயுத பூஜை தொடர் விடுமுறை.. சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்.. சிறப்பு பேருந்துகள் முழு விபரம் இதோ.!
மோதல் போக்கை தவிர்க்க நடவடிக்கை:
மாணவர்கள் இடையே போராட்டம், மோதல் போக்கை தவிர்க்கவும், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கவும் இன்று முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் மாநிலக்கல்லூரியின் முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத்தொடர்ந்து, விடுமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் கண்காணிக்க அறிவுறுத்தல்:
இதனால் கல்லூரி மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி வரும் நிலையில், அவர்களை பின்தொடர்ந்து கண்காணிக்கவும் காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் சரியாக வீடுகளுக்கு செல்கிறீர்களா? அல்லது வேறு எங்கேனும் கூட்டமாக சேர்த்து போராட்டம் நடத்தப்போகிறார்களா? என அதிகாரிகள் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் காவல்துறையினர் வருகை:
கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட போதிலும், காவல் துறையினரின் உத்தரவை மீறி மாநிலக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். வீட்டிற்கு செல்லும் மாணவர்களையும், அவர்கள் விடாப்பிடியாக போராட்டத்தில் ஈடுபட முயற்சிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு சூழல் உண்டாகியுள்ளது. கூடுதல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.