SETC Bus (Photo Credit: @ArasuBus X)

அக்டோபர் 09, கிளாம்பாக்கம் (Chennai News): ஆயுத பூஜை பண்டிகை மற்றும்‌ தொடர்‌ விடுமுறையை முன்னிட்டு 09/10/2024 மற்றும்‌ 10/10/2024 ஆகிய நாட்களில்‌ சென்னையிலிருந்தும்‌, பிற இடங்களிலிருந்தும்‌ கூடுதலான பயணிகள்‌ தமிழகம்‌ முழுவதும்‌

பயணம்‌ மேற்கொள்வார்கள்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில்‌ கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌

கழகங்கள்‌ தினசரி இயக்கப்படும்‌ பேருந்துகளுடன்‌ கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு:

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம்‌, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில்‌, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர்‌, சேலம்‌, ஈரோடு, திருப்பூர்‌ ஆகிய இடங்களுக்கு 09/10/2024 (புதன்கிழமை) அன்று 225 பேருந்துகளும்‌, 10/10/2024 (வியாழக்கிழமை) அன்று 880 பேருந்துகளும்‌ இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர்‌. பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 09/10/2024 புதன்கிழமை அன்று 35 பேருந்துகளும்‌ 10/10/2024 வியாழக்கிழமை) அன்று 265 பேருந்துகளும்‌ மேற்கூறிய இடங்களிலிருந்தும்‌

இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. College Student Dies: "ரூட்டு தல" விவகாரத்தில் கல்லூரி மாணவர் அடித்தே கொலை.. 5 நாட்கள் போராடி பறிபோன உயிர்.!

பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு:

பெங்களூர்‌, திருப்பூர்‌, ஈரோடு மற்றும்‌ கோயம்புத்தூர்‌ ஆகிய இடங்களிலிருந்தும்‌ பல்வேறு இடங்களுக்கும்‌ 200 சிறப்பு

பேருந்துகளும்‌ இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 09/10/2024 மற்றும்‌ 10/10/2024 ஆகிய நாட்களுக்கு 110 சிறப்பு பேருந்துகளும்‌ இயக்கப்படுகிறது. மேலும்‌ , ஞாயிறு அன்று சொந்த ஊர்களில்‌ இருந்து சென்னை மற்றும்‌ பெங்களூர்‌ திரும்ப வசதியாக பயணிகளின்‌ தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும்‌ சிறப்பு பேருந்துகள்‌ இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது .

கும்பகோணம் போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு:

அதேபோல, கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் வார விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, பொது மக்களின்‌ வசதிக்காக. திருச்சி, கும்பகோணம்‌. தஞ்சாவூர்‌, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம்‌, திருவாரூர்‌, மமிஸாடுதுறை, வேதாரண்யம்‌, திருத்துறைப்பூண்டி. புதுக்கோட்டை. காரைக்குடி. இராமநாதபுரம்‌ ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கும்‌, சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம்‌, தஞ்சாவூர்‌, பட்டுக்கோட்டை. நாகப்பட்டிணம்‌, வேளாங்கண்ணி, திருவாரூர்‌, மமிலாடுதுறை, வேதாரண்யம்‌, திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம்‌ ஆகிய ஊர்களுக்கு முன்று நாட்களுக்கும்‌ சேர்த்து 660 கூடுதல்‌ சிறப்பு பேருந்துகளும்‌, திருச்சியிலிருந்து கோயம்புத்தூர்‌, மதுரை ஆகிய இடங்களுக்கும்‌, கோயம்புத்தூர்‌. திருப்பூர்‌. மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும்‌, திருச்சிமிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, நாகப்பட்டினம்‌, வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு இரண்டு நாட்களும்‌ சேர்த்து 250 பேருந்துகள்‌ கூடுதலாக இயக்கப்படும்‌.

முன்பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தல்:

09:10.2024, 10.10.2024, மற்றும்‌ 11.10.2024 புதன், வியாழன்‌ மற்றும்‌ வெள்ளி ஆகிய முன்று நாட்களுக்கும்‌ சேர்த்து மொத்தம்‌ 830 சிறப்பு பேருந்துகள்‌ இயக்கப்பட உள்ளது. அதே போன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள்‌ மீண்டும்‌ அவரவர்‌ ஊர்களுக்கு, திரும்ப செல்ல ஞாயிறு மற்றும்‌ திங்கள்‌ நாட்களில்‌ சென்னை தடத்தில்‌ 300 சிறப்பு பேருந்துகளும்‌, பிறத்தடங்களிலும்‌ 200 சிறப்பு பேருந்துகளும்‌, இயக்க விரிவான ஏற்பாடு.செய்யப்பட்டுள்ளது. பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்ய TNSTC.IN என்ற இணையப்பக்கத்திலும் TNSTC செயலியில் முன்பதிவு செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.