Puzhal Man Killed: கண்களை மறைத்த காதலால், திருமணமான காதலியுடன் கரம்கோர்த்த முன்னாள் காதலன் நடுரோட்டில் வெட்டிக்கொலை.. விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலம்.!
17 வயதில் காதலில் விழுந்து விருப்பமில்லாத திருமணம் செய்து குழந்தையை பெற்றெடுத்த பெண்மணி, 2 ஆண்டுகள் கழித்து தனது முன்னாள் காதலரோடு ஓட்டம் பிடித்த சம்பவத்தில், பெண்ணின் கணவர் மனைவியின் முன்னாள் காதலரை வெட்டி கொலை செய்த சம்பவத்தை நிகழ்த்தி தலைமறைவாகியுள்ளார்.
பிப்ரவரி 02, புழல்: திருமணம் முடிந்த பெண்ணை தன்னுடன் அழைத்து சென்று 2 மாதங்கள் குடும்பம் நடத்திய இளைஞன், நடுரோட்டில் காதலி & அவரின் கைக்குழந்தை முன்பு (Girl Live with Ex Lover after Marriage, Girls Brother Team Killed her Ex Love Boy) வெட்டி கொல்லப்பட்ட பயங்கரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சென்னையில் உள்ள புழல் (Puzhal, Chennai), லட்சுமிபுரம் குமரன் தெருவில் வசித்து வருபவர் சுதா சந்தர் (வயது 22). சென்னையில் (Chennai) செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினத்தில் இருசக்கர வாகனத்தில் கைக்குழந்தை, பெண்ணுடன் புழல் லட்சுமிபுரம் கல்பாளையம் பகுதியில் வந்துகொண்டு (Youngster Murdered in front of Love Girl by 5 Man Team) இருந்தபோது 5 பேர் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கொளத்தூர் (Kolathur Police) மாவட்ட காவல் உதவி ஆணையர் இராஜாராம், உதவி ஆணையர் ஆதிமூலம், காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான காவல் துறையினர் சுதா சந்தரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து சுதாவுடன் வந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல பரபரப்பு தகவல் வெளியானது.
சென்னை ஆவடி (Avadi,Chennai), மோரை பகுதியை சேர்ந்த ராகவி (வயது 19), கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுதா சந்தரை காதலித்து (Love) வந்துள்ளார். இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், ராகவியின் பெற்றோருக்கு விஷயம் தெரியவந்ததால் உறவினரான வசந்த் என்பவருக்கு ராகவியை திருமணம் (Marriage) செய்து வைத்துள்ளனர். இருவருக்கும் 2 மாதத்தில் பிறந்த பெண் குழந்தை இருக்கிறது. ICAI Result Official Announcement: சார்ட்டர்டு அக்கவுண்டரி படிப்பு தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
இதற்கிடையே, கணவருடன் (Husband) கருத்து வேறுபாட்டை ஏற்படுத்திய ராகவி, தனது முன்னாள் காதலர் சுதா (Ex BoyFriend) சந்தரோடு சேர்ந்து வாழ முடிவெடுத்து இருக்கிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைக்குழந்தையோடு (Baby) வீட்டில் இருந்து வெளியேறியவர், சுதா சந்தரோடு புழல் லட்சுமிபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து (Living Togethar) குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், தனது மனைவி, குழந்தையை அபகரித்து சுதா சந்தர் ஏற்படுத்திய வாழ்வு வசந்தை நிம்மதியாக உறங்கவிடவில்லை. தனது மனைவி, குழந்தை மீது வைத்த அளவுகடந்த பாசத்தால் மனைவியின் முன்னாள் காதலனின் மீது பெரும் ஆத்திரம் கொண்டு சுதா சந்தரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்து கொலை (Murder) சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்ற விஷயம் அம்பலமானது.
இதனையடுத்து, கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ள காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் சகோதரர் உட்பட 2 பேரை கைது செய்துள்ள காவல் துறைஞர், பிறரை தேடி வலைவீசியுள்ளனர்.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 02, 2023 11:25 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)