Rain Alert: அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் பேய்மழை: இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை.!
இதில் நாளை மட்டும் சிவப்பு எச்சரிக்கையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 06, சென்னை (Chennai): சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இலட்சத்தீவு பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் 6ம் தேதியான இன்று தென் மாவட்டங்கள், வடதமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதன் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, தேனி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் மலைப்பகுதிகள், காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அதிக கனமழைக்கான சிகப்பு எச்சரிக்கை: 7ம் தேதியை பொறுத்தமட்டில் தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும் (Red Alert Tamilnadu), திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
8, 9ம் தேதி மழை நிலவரம்: 8ம் தேதியை பொறுத்தமட்டில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 9ம் தேதியில் தென்தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். New Zealand MP Hana Rawhiti: மவொரி பாரம்பரிய முறைப்படி, நாடாளுமன்றத்தில் உரை: வியந்து ரசித்த அவையோர்.. மெய்சிலிர்க்கவைத்த 21 வயது பெண் எம்.பி.!
சென்னையில் மழைக்கு வாய்ப்பு: 10ம் தேதியை பொறுத்தமட்டில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை-காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். 11 மற்றும் 12ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியசம், குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்.
மீனவர்களுக்கு 4 நாட்களுக்கு எச்சரிக்கை: மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 6-ம் தேதியான இன்று தமிழக கடலோர பகுதி, அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும். 7ம் தேதியை பொறுத்தமட்டில் தமிழக கடலோர பகுதி, அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதி, மன்னார் வளைகுடா, அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வேகம் வரை வீசப்படும். 8ம் தேதி முதல் 10ஆம் தேதி வரையில் தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார்குளைகுடா அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல், இலங்கை கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.