வானிலை: இன்று 22, நாளை 19 மாவட்டங்களில் கனமழை; சென்னை மக்களே மிககவனம்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
15 - 16 ஆம் தேதியில் வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் தமிழ்நாட்டில் மழை ருத்ரதாண்டவம் ஆடக் காத்திருக்கிறது.
அக்டோபர் 13, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (TN Weather Update) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பொறுத்த வரையில், "தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், தென் தமிழகத்தில் அநேக இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் அதிகபட்சமாக 16 செமீ மழையும், சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் 14 செமீ மழையும் பதிவாகியுள்ளது. சிவகாசி, தல்லாகுளம், ராமேஸ்வரம், வெட்டிகாடு ஆகிய பகுதிகளில் தலா 12 செமீ மழையும், மதுரை வடக்கு பகுதியில் 11 செமீ மழையும் அதிகபட்சமாக பெய்துள்ளது. விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தர்மபுரி, அரியலூர், கரூர், பெரம்பலூர், திருவாரூர், திருச்சி, கோவை, ஈரோடு, சிவகங்கை, நீலகிரி, கடலூர், சேலம், தஞ்சாவூர், திருப்பூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, வேலூர், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், நாகப்பட்டினம் உட்பட பல மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மதுரை விமான நிலையத்தில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், ஈரோட்டில் 17.8 டிகிரி வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி:
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையில், தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 14 - ஆம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும். தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகும் நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், 15 - 16 ஆம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும். Tamil Rockers: வேட்டையன் படத்தை படம்பிடித்த தமிழ் ராக்கர்ஸ் கும்பலை சேர்ந்த இருவர் கைது; கேரளாவில் சிக்கிய குருவிகள்.!
இன்றைய வானிலை (Today Weather):
13.10.2024 அன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளைய வானிலை (Tomorrow Weather)
14.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் (Red Alert Tamilnadu), சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையில் அக்.15 அன்று மிககனமழை:
15.10.2024: வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுஇகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. Shocking Video: படிக்கட்டில் தொங்கியவாறு நடனம்.. மின்சார கம்பியின் மீது மோதிய புள்ளிங்கோ படுகாயம்.! அதிர்ச்சி காட்சிகள்.!
அக்.16 அன்று சென்னை & சுற்றுவட்டார மாவட்டங்களில் மிக கனமழை:
16.10.2024 அன்று வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அது கனமழையும், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
11 மாவட்டங்களில் அக்.11 அன்று மழை:
17.10.2024 அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும்
பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை வானிலை நிலவரம் (Chennai Weather Forecast):
18.10.2024 மற்றும் 19.10.2024: தமிழகத்தி ல் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34” செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். Chennai Rains: சென்னையை மிரட்டப்போகும் மழை; வானிலை மையம் எச்சரிக்கை.. துணை முதல்வர் அதிரடி ஆய்வு.!
மீனவர்களுக்கான (Fishermen Warning) எச்சரிக்கை:
13.10.2024 முதல் 15.10.2024 வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் ஆகிய இடங்களுக்கும், 16.10.2024 முதல் 17.10.2024 வரை வட தமிழக கடலோரப்பகுதிகள், தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், 13.10.2024 இன்று தெற்கு வங்கக்கடல் பகுதிகள், 14.10.2024 நாளை தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், 15.10.2024 அன்று ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள், 16.10.2024 அன்று தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு, மத்தியமேற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், 17.10.2024 அன்று தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு, மத்தியமேற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் வானிலை நிலவரம்:
13.10.2024 இன்று கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகள், அரபிக்கடலின் மத்திய பகுதிகள், வடக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 14.10.2024 அன்று மத்தியமேற்கு அரபிக்கடல், வடக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்துலும் வீசக்கூடும் என்பதால் மேற்கூறிய பகுதிகளுக்கு குறிப்பிட்ட நாட்களில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.