அக்டோபர் 13, ராயபுரம் (Chennai News): சென்னையில் உள்ள புறநகர் மின்சார (Chennai Sub Urban Local Train) இரயில் சேவை, தினமும் பள்ளி-கல்லூரிகள், பணியிடங்களுக்கு செல்லும் மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகவும், நேரத்தை மிச்சப்படுத்தும் போக்குவரத்தாகவும் அமைந்துள்ளது. நாளொன்றுக்கு இலட்சக்கணக்கான பயணிகள் காலை முதல் நள்ளிரவு வரை புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்கின்றனர்.
காவல்துறையினர் பாதுகாப்பு:
இதனிடையே, அவ்வப்போது மின்சார இரயிலில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு, செருப்புகளை நடைமேடையில் உரசியவாறு பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனை கண்காணித்து இளைஞர்களை கண்டிக்க இரயில்வே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். Chennai Rains: சென்னையை மிரட்டப்போகும் மழை; வானிலை மையம் எச்சரிக்கை.. துணை முதல்வர் அதிரடி ஆய்வு.!
கல்லூரி மாணவர் விபத்தில் சிக்கினார்:
எனினும், ஒருசில நேரம் இளைஞர்கள் மின்சார இரயிலில் பயணிக்கும்போது, அதன் கம்பிகளை பிடித்து வெளியே தொங்கியவாறு சாகசம் செய்து ஆபத்தை விலைக்கு வாங்கி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் உள்ள மாதவரம் பகுதியை சேர்ந்த அபிலாஷ் என்ற கல்லூரி மாணவர், சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் மின்சார இரயிலில் இராயபுரத்தில் இருந்து பயணம் செய்தார்.
ஆபத்தான நடனம்:
அப்போது கம்பிகளை பிடித்து உடலை ரயிலுக்கு வெளியே நீட்டி நடனமாடி அவர் வந்தார். இதனை அவரின் நண்பர் வீடியோ எடுத்து வந்த நிலையில், ஒரு இடத்தில் மின்சார இரயில்களுக்கு மின்சாரத்தை வழங்கும் கம்பி அமைப்பின் மீது மோதி படுகாயமடைந்து கீழே விழுந்தார். மின்சார இரயில் அடுத்த இரயில் நிலையம் சென்றதும், சம்பவம் குறித்து இளைஞரின் நண்பர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வீடியோ வைரல்:
இதன்பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் படுகாயமடைந்த அபிலாஷை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கல்லூரி மாணவர் விபத்தில் சிக்கும் பதைபதைப்பு காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.
அபிலாஷ் விபத்தில் சிக்கும்போது எடுக்கப்பட்ட பதைபதைப்பு காட்சிகள்:
சென்னை ராயபுரம், புறநகர் இரயில் பயணத்தில் ஆபத்தான சாகசம்..
மாதவரம் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் அபிலாஷ் என்பவர் படுகாயம் எனத் தகவல்..
More details Awaited..#Chennai #LocalTrain #LatestLY_Tamil @latestly pic.twitter.com/miqVWP4jxm
— Sriramrpckanna (@Sriramrpckanna1) October 13, 2024