அக்டோபர் 13, ரிப்பன் மாளிகை (Chennai News): தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் மழை, வெள்ளம் பேரிடர் மீட்பு குழுவின் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தது பேசுகையில், "தமிழ்நாட்டில் அதிதீவிர மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசின் சார்பில் எடுக்கப்பட்டுள்ளன. மழை வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் 1913 என்ற அவசர அழைப்பு எண்ணுக்கு மக்கள் தொடர்பு கொள்ளலாம். Karur Shocker: குடிகார மருமகனால் மாமனாருக்கு நேர்ந்த பயங்கரம்: கரூரில் துயரம்.. பரிதாப பலி.!
தயார் நிலையில் அதிகாரிகள்:
சென்னை தலைமை செயலகத்தில் அவசர அழைப்புகளை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க பிரத்தியேக கட்டுப்பாட்டு மையம் இருக்கிறது. இங்கு 150 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறர்கள். இவர்கள் மக்களுக்கு தேவையான தகவலை வழங்குவார்கள், அதனை கேட்டறிந்து அரசின் துறைகளுக்கு அறிவுறுத்துவார்கள்.இதுதவிர சமூக வலைத்தளத்தில் இருந்து பகுத்தார்கள் பெற்று நடவடிக்கை எடுக்கவும், மழை குறித்து அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. TN Alert App: புயல், மழை, வெள்ளமா? இனி கவலை வேண்டாம்... உடனடி அலர்ட்களை 'TN Alert' செயலியில் பெறுங்கள்.. விபரம் உள்ளே.!
டிஎன் அலர்ட் செயலியுடன் இணைந்திருங்கள்:
அரசுடன் இணைந்து செயல்பட 13 ஆயிரத்திற்கும் அதிகமான தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை வெளியேற்ற பிரத்தியேக மோட்டார்கள் இருக்கின்றன. மழை நீர் தேங்க வாய்ப்புள்ள 31 இரயில்வே சுரங்கபாதைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி வார்டுகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. டிஎன் அலர்ட் (TN Alert) செயலி வாயிலாக வானிலை தகவலை உடனுக்குடன் மக்கள் தெரிவித்துக்கொள்ளலாம். மூடாமல் இருக்கும் கழிவுநீர் பாதைகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக அடையாளப்படுத்தலாம். மின்தாக்குதலால் மக்கள் அவதிப்படாமல் இருக்க மின்சார கம்பிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என கூறினார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்து புகார் அளித்தவரிடம் விசாரித்த காட்சிகள்:
வடகிழக்குப் பருவமழை காலத்தில் சென்னையையொட்டியுள்ள பகுதிகளில் மிகக்கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே, சென்னைப் பெருநகர மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின்… pic.twitter.com/AilFbnqpDW
— Udhay (@Udhaystalin) October 13, 2024