TN Weather Update: "அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அசௌகரியம்" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
மேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனினும், வரும் 2 நாட்களுக்கு வெப்பநிலை காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 13, நுங்கம்பாக்கம் (Chennai News): சென்னை வானிலை (Weather) ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி நாளைய வானிலை (Tomorrow Weather) அறிக்கையை பொறுத்தமட்டில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வடமாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. தென் மாவட்டங்கள், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலைய பகுதியில் 40.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக ஈரோட்டில் 19 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. Cuddalore News: ரூ.10 க்கு விற்பனை செய்யப்பட்ட குளிர்பானத்தால் நடந்த சோகம்; கடலூரில் துயரம்.. சிறுவனின் தாய் பரிதவிப்பு.!
2 நாட்களுக்கு வெயில் வாட்டும்:
அடுத்த ஏழு (Tamilnadu Weather Update) நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்தவரையில், மேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக 13ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தமிழ்நாடு பகுதிகளில் ஒரு சில இடங்களில், புதுவை-காரைக்கால் பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையாக, ஒரு சில இடங்களில் இரண்டு டிகிரி முதல் மூன்று டிகிரி வரை இயல்பை விட அதிகமாக இருக்கும். இதனால் அசவுகரியமும் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணிநேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸும் பதிவாகும். மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 13ம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை தமிழக கடலோரப்பகுதி, வங்கக்கடலில் தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு, வடக்கு வங்கக்கடல், ஒரிசா-மேற்குவங்க கடலோரப்பகுதி ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டாம். இப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 30 கிலோமீட்டர் வேகம் முதல், 50 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும்.
அரபிக்கடலை பொறுத்தமட்டில் 13ம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக் கடல், அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் முதல் 50 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.