Mother Krishnaveni with Son (Photo Credit: @PolimerNews X)

செப்டம்பர் 13, விருத்தாச்சலம் (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் (Virudhachalam), வி. சாத்தப்பாடி கிராமத்தைச் சார்ந்த விஜயகுமார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு உயிரிழந்துவிட்டார். விஜயகுமாரின் மனைவி கிருஷ்ணவேணி. இவர் தனது இரண்டு மகனுடன் வசித்து வருகிறார். மூத்த மகன் ஜெகதீஷ், அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இதனிடையே, சம்பவத்தன்று ஊரில் உள்ள பெட்டிக்கடையில் சிறுவன் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட குளிர்பானம் ஒன்றை வாங்கி குடித்ததாக தெரிய வருகிறது.

சிறுவனுக்கு உடல்நலக்குறைவு:

இதனை குடித்த சிறுவன் சில நிமிடங்களில் மயங்கி விழுந்துவிடவே, மகனை மீட்ட தாய் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளார். பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டவர், சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு நடந்த பரிசோதனையில் சிறுவனின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமானதைத்தொடர்ந்து, அவர் தற்போது விருத்தாச்சலம் தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். Eid e Milad Holiday: தமிழ்நாட்டில் மிலாடி நபி பொதுவிடுமுறை எப்போது?.. விபரம் உள்ளே.! 

அதிகளவு வேதிப்பொருள்?

அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், சிறுவன் குடித்த ஜூசும் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், சிறுவன் குடித்த ஜூஸில் சோடியம் கார்போஹைட்ரேட் வேதிப்பொருள் அளவுக்கு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கல்லீரல் பிரச்சனை:

மேலும், இந்த விஷயம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் கூறுகையில், "தனது மகன் குடித்த குளிர்பானமே, அவரது கல்லீரல் பிரச்சனைக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த விஷயம் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவித்த போது, அவர்கள் தாங்கள் வந்து விசாரிப்பதாக கூறிவிட்டு அழைப்பு துண்டித்துவிட்டனர். மேற்படி விசாரணை எதுவும் நடக்கவில்லை. கணவரை இழந்து வசித்துவரும் நான், கஷ்டப்பட்டு குடும்பத்தை கவனிக்கிறேன். எனது மகனை காப்பாற்ற, உதவி செய்ய இயன்றோர் முன்வரவேண்டும். அரசு குளிர்பான நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

குளிர்பான விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. கடைகளில் விற்பனை செய்யும் மலிவான குளிர்பானங்கள் உட்பட எந்த குளிர்பானத்தையும் மக்கள் வாங்கி குடிக்காமல் இருப்பது நல்லது, அதனை குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்த வேண்டாம்.

தாய் கிருஷ்ணவேணி தனது மகனின் நிலையை செய்தியாளர்களுடன் வருந்தி விளக்கிய காட்சி:

வீடியோ நன்றி: பாலிமர் தொலைக்காட்சி