TN Weather Update: 13 மாவட்டங்களில் இன்று கனமழை; அடுத்த 7 நாட்களுக்கு மழை நிலவரம் எப்படி? நாளைய வானிலை அறிவிப்பு இதோ.!
வானிலை மையத்தின் அறிவிப்பை எமது லேட்டஸ்ட்லியில் படிக்க தொடர்ந்து வாசிக்கவும்.
ஆகஸ்ட் 30, நுங்கம்பாக்கம் (Chennai News): சென்னை வானிலை (Chennai RMC) ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் (Weather Update), அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு-புதுச்சேரி பகுதியில் மிதமான மழைக்கான சாதகமான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம், இதுகுறித்து வெளியிட்டுள்ள நாளைய வானிலை (Tomorrow Weather) தகவல் பின்வருமாறு.,
இன்று கனமழை எச்சரிக்கை:
தமிழகத்தில் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கான சாதகமான சூழல்கள் நிலவி வருகிறது. தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்திருக்கிறது. அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த ஆறு மணி நேரத்தில் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும். அதே நேரத்தில், வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா பகுதியில் நிலவே வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 36 மணி நேரத்தில் வலுப்பெறலாம். இதனால் 30-ஆம் தேதியான இன்று, தமிழ்நாடு-புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளது. DMK Worker Dies by Suicide: திமுக எம்.எல்.ஏ வீட்டு முன் நடந்த சோகம்; தீக்குளித்த தொண்டர் சிகிச்சை பலனின்றி பலி.!
சென்னை (Chennai Weather) நிலவரம் என்ன?
31 ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது. 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில், தமிழ்நாட்டில் பரவலான இடங்களில் பலத்த காற்று மணிக்கு 30 கிலோமீட்டர் வேகம் முதல் 40 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும். சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யலாம். தலைநகர் சென்னையை பொறுத்தமட்டில் வரும் 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. நகரில் அதிகபட்சமாக 33 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்,
வங்கக்கடல், தமிழக கடலோர பகுதி மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 30ஆம் தேதி முதல் வரும் 3ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதி, அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதி, வட தமிழக கடலோரப்பகுதி ஆகிய இடங்களில் பலத்த சூறைக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும். இடையிடையே பலத்த காற்று 75 கி.மீ வேகம் வரையிலும் வீசலாம். வங்கக்கடலைப் பொறுத்தமட்டில் 30ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரையில் மத்திய வங்கக்கடல், தெற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதி, வடமேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதி, ஆந்திர கடலோரப்பகுதி, மத்திய மேற்கு வங்கக்கடல் ஆகிய இடங்களில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதி மீனவர்களுக்கு எச்சரிக்கை:
அரபிக்கடல் பகுதிகளை பொறுத்தமட்டில் வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல், வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோரப்பகுதி, கேரளா கடலோரப்பகுதி, லட்சத்தீவு, மத்திய கிழக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசும். இடையிடையே 65 கிலோமீட்டர் வேகம் முதல் 75 கிலோமீட்டர் வரையிலும் வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.