Chennai Heatwave: அனலில் நீந்தி தவிக்கப்போகும் சென்னை மக்கள்.. அதிக வெப்பத்திற்கான எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்.!

அதேபோல, சென்னை நகரிலும் வெயில் சுட்டெரித்து, அசௌகரிய சூழ்நிலை உண்டாகும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Heatwave (Photo Credit: pixabay)

செப்டம்பர் 19, நுங்கம்பாக்கம் (Chennai News): மேற்குத்திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் (Weather Alert in Tamilnadu) வரும் 7 நாட்களுக்கு மிதமான மழையே வாய்ப்புள்ளது. பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை (Weather) நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம், தனது நாளைய வானிலை (Tomorrow Weather) அறிக்கையில் தெரிவித்து இருந்தது. ஒருசில இடங்களில் திடீர் காற்றுடன் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. TN Weather Update: இடி-மின்னலுடன் மழையே வந்தாலும், வெப்ப அலை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! 

வெப்ப அலை எச்சரிக்கை:

இந்நிலையில், தலைநகர் சென்னையில் (Chennai HeatWave) வரும் இரண்டு நாட்களுக்கு அதிகபட்சமாக 102 பேரன்ஹீட் வெப்பநிலை பதிவாகும் என்பதால், பகல் வேளைகளில் வெளியே செல்வோர், நீர் இழப்பு உட்பட பிற உடல் பிரச்சனைகளை தவிர்க்க தங்களுடன் தண்ணீரை எடுத்து செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடல் சூட்டை குறைக்கும் வகையிலான பழங்கள், பழச்சாறுகள், இளநீர், மோர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில், தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் அதிக வெப்பம் காரணமாக அசௌகரியம் உண்டாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. நண்பகல் வேளைகளில் வெளியே செல்வோர் கவனமாக இருப்பது நல்லது.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif