Coimbatore Shocker: திருமணமான ஒரே மாதத்தில் விரிசல்; தாய்-தந்தை, மகள் என கேக்கில் விஷம் கலந்து சாப்பிட்டு குடும்பமே தற்கொலை.!
மென்பொறியாளராக ஒருசேர பணியாற்றிய புதுமண தம்பதியிடையே ஏற்பட்ட மணமுறிவு காரணமாக, அவர் ஒரே மாதத்தில் தாய் வீடு வந்ததால் குடும்பமே தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
பிப்ரவரி 24, கவுண்டம்பாளையம் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம், டிவிஎஸ் நகர் சாலை, ஜவஹர் நகரில் வசித்து வருபவர் கணேசன் (வயது 65). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். கணேசனின் மனைவி விமலா (வயது 55). தம்பதிகளுக்கு தியா காயத்ரி (வயது 25) என்ற மகள் இருக்கிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களின் பூர்வீகம் கேரளா மாநிலம் ஆகும்.
ஒரு மாதத்திற்குள் கருத்து வேறுபாடு: இந்நிலையில், காயத்ரிக்கு கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி பகுதியை சேர்ந்த ஐ.டி ஊழியர் தீட்சித் என்ற நபருடன், கடந்த நவம்பர் மாதம் 03ம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. பின் தம்பதிகள் பெங்களூரில் தங்கியிருந்தவாறு ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். திருமணம் முடிந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே புதுமண ஜோடி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சின்னசின்ன தகராறும் நடந்துள்ளது.
தற்கொலை செய்ய திட்டம்: ஒருகட்டத்தில் கணவரிடம் சண்டையிட்ட காயத்ரி, கோபித்துக்கொண்டு தனது பெற்றோரின் வீட்டிற்கு வந்துள்ளார். திருமணமான ஒரே மாதத்தில் மகள் தனது கணவரை பிரிந்து வந்தது, அவரின் பெற்றோருக்கு வருத்தத்தை அளித்துள்ளது. இவர்கள் மூவரும் ஒரு சமயத்தில் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற விபரீத எண்ணத்திற்கும் சென்றுள்ளனர். கடந்த 21ம் தேதி வீட்டின் கதவை பூட்டிய கணேசன், விமலா, காயத்ரி ஆகியோர் கேக்கில் விஷம் தடவி சாப்பிட்டு இருக்கின்றனர். Stray Bull Attack Death: 43 வயது நபரை முட்டித்தூக்கி, கொடுரமாக தாக்கி கொலை செய்த காளை; பொய்த்துப்போன உயிர்காப்பு முயற்சிகள்.!
மனமுடைந்து பேசிய சகோதரன்: மேலும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, போவையில இருக்கும் தனது சகோதரருக்கு தொடர்புகொண்ட கணேசன், குடும்பத்தின் நிலை குறித்து வருந்தி கூறி இருக்கிறார். இதன்பின் தம்பியின் குடும்பத்திற்கு அழைப்புகள் மேற்கொள்ளப்படவில்லை. பலமுறை சகோதரருக்கு தொடர்புகொண்டும் பலனில்லை என்பதால், நேற்று இரவு 8 மணியளவில் அவர் அண்ணனை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார்.
மூவரின் சடலம் மீட்பு: அங்கு வீடு உட்புறமாக தாழிட்டு இருக்க, அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பெரும் அதிர்ச்சியாக விமலா, கணேசன், காயத்ரி சடலமாக இருந்துள்ளதை கண்டுள்ளனர். பின் இந்த விஷயம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்துள்ளது.
தற்கொலைக்கான காரணம்: விசாரணையில், மகள் காயத்ரி திருமணமான ஒரே மாதத்தில் கணவருடன் மணமுறிவு காரணமாக வீட்டிற்கு வந்தது, பெற்றோரின் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு ஆகிய காரணத்தால் இவர்கள் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.
கேக்கில் விஷம் தடவி நடந்த சோகம்: இவர்களின் தற்கொலை கடித குறிப்பின்படி, "மணமான ஒரு மாதத்திற்குள் மகள் கணவரை பிரிந்து வந்துவிட்டாரே என தம்பதிகள் வேதனையில் இருந்துள்ளனர். இவர்கள் மூவருமாக சேர்ந்து தற்கொலை செய்ய திட்டமிட்டு, அவர்களின் திட்டப்படி கேக்கில் விஷம் தடவி சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளனர். கணேசன் பேக்கரிக்கு சென்று கேக் வாங்கிவந்து, விஷத்தை கேக்கில் தடவி பெற்றோர்-மகளுமான சாப்பிட்டு உயிரை மாய்த்துள்ளனர். இவர்களின் கைப்பட எழுதிய கடிதத்தில், "எங்களின் மரணத்திற்கு காரணமான நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டு இருக்கின்றனர்.