Three Students Drown To Death: தடுப்பணையில் குளிக்க சென்ற அரசு பள்ளி மாணவர்கள்... நீரில் மூழ்கி உயிரிழப்பு..!
கோவை, தீத்திபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் தடுப்பணையில் குளிக்கச் சென்ற போது நீச்சல் தெரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏப்ரல் 25, கோவை (Coimbatore News): கோவை திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த தீத்திபாளையம் அரசு மேல் நிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பிரவீன், கவின், தக்க்ஷன் மற்றும் சஞ்சய் ஆவர். இவர்கள் காருண்யா நகர் காவல் நிலைய சரகம் பெருமாள் கோவில்பதி கிராமம் முண்டாந்துறை ஆறு தடுப்பணையில் சென்று குளித்து உள்ளனர். 40 அடி ஆழம் உள்ள தடுப்பணையில் தற்போது 15 அடி நீர் உள்ளது. Gold scam: தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைத்து பல லட்ச ரூபாய் மோசடி.. சென்னையை சேர்ந்தவர் உட்பட 7 பேர் கைது...!
இதில் நீச்சல் தெரியாமல் பிரவீன், கவின், தக்ஷன் ஆகிய 3 பேரும் நீரில் மூழ்கி இறந்து (Drown To Death) உள்ளனர். இது குறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் 3 பேரின் உடல்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து காருண்யா நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.