Dindigul Accident: ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பயங்கரம்; டீக்கடைக்குள் புகுந்த மினி வேன்; 4 பேர் துடிதுடிக்க பலி.!

விபத்துகள் எப்போதும் எங்கும் நடக்கலாம், ஒவ்வொரு ஓட்டுனரும் சாலை விதிகளை முறையாக கடைபிடித்து மிதவேகத்தில் சென்றால் 80% விபத்துகளை குறைக்கலாம்.

Oddanchatram Accident Visual (Photo Credit: Twitter)

ஜூலை 17, திண்டுக்கல் (Dindigul Accident News): மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவர் கோவையில் இருந்து மதுரை நோக்கி மின் வேனை இயக்கி வந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தயம் - தும்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரின் மகன் சிவராஜ்.

இவர் தனது தாயாருக்கு மாத்திரை வாங்க, தனது தாயாருடன் ஒட்டன்சத்திரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார். இவர்களின் வாகனம் தங்கச்சியம்மாபட்டி பகுதியில் வந்துள்ளது.அப்போது, கோவையில் இருந்து வந்த வேனும் அதே இடத்தில் வந்துள்ளது. திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது.

பின், தறிகெட்டு இயங்கிய மினி வேன், சாலையின் இடதுபுறம் செயல்பட்டு வந்த வி.ஆர்.எஸ் பேக்கரிக்குள் நுழைந்துள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சிவராஜின் தாய் காளியம்மாள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினார். சிவராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Indian Hockey Team: சீன அணியிடம் தோல்வியை சந்தித்த இந்திய மகளிர் ஹாக்கி அணி; இறுதி நேரத்தில் மாறிப்போன ஆட்டம்.!

Oddanchatram Accident Visual from Spot (Photo Credit: Twitter)

பேக்கரியில் இருந்த கோயம்புத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன், அவரின் மனைவி சரஸ்வதி, உறவினர் பழனிச்சாமி, மைத்துனர் விஸ்வநாதன் ஆகியோரும் இருந்த நிலையில், சரஸ்வதி மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் பேக்கரி கழிவறையில் இருந்ததால் உயிர் தப்பினர். ரவிச்சந்திரன் மற்றும் பழனிசாமி பரிதாபமாக பலியாகினர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த அம்பிளிக்கை காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த இடத்தை ஒட்டன்சத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் முருகேசன், வட்டாட்சியர் முத்துசாமி ஆகியோரும் நேரில் வந்து பார்வையிட்டனர்.