IPL Auction 2025 Live

Vikravandi ByPoll Results 2024: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றிக்கொடிநாட்டியது திமுக: அன்னியூர் சிவா அமோக வெற்றி.!

இந்த இடைத்தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை மீண்டும் வழங்கியுள்ளது.

Anniyur Siva | Abinaya | C Anbumani (Photo Credit @THChennai @THChenna @kamaraj_abinaya X)

ஜூலை 13, விக்கிரவாண்டி (Viluppuram News): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி (Vikravandi Assembly Constituency) சட்டப்பேரவை திமுக உறுப்பினர் புகழேந்தி மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து, அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்து, ஜூலை 13ம் தேதியான இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின.

விறுவிறுப்பான முடிவுகள்:

திமுக சார்பில் வேட்பாளராக அன்னியூர் சிவா, பாஜக-பாமக கூட்டணி சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் அபிநயா உட்பட 29 வேட்பாளர்கள் களமிறங்கி இருந்தனர். இந்த தேர்தல் முடிவுகள் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதலாக தொடங்கி நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்து முன்னிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா இருந்து வந்தார். Youth Bitten by a Snake: தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்காக மருத்துவமனை வந்த இளைஞர்; உயிர்காத்த மருத்துவர்கள்.! 

வெற்றிகொண்டாட்டத்தில் திமுக:

அவரின் வெற்றி ஏறக்குறைய 4 சுற்றுகளை கடந்ததும் 10 ஆயிரம் வாக்குகளை கடந்து வித்தியாசம் உண்டாகியதை தொடர்ந்து, திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கினர். வெற்றி என்ற அறிவிப்பு வரும் முன்னரே, முன்னிலை விபரத்தை மட்டும் வைத்து வாக்கு எண்ணிக்கை மையம் முன்பும், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் முன்பும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் முடிவுகளின்படி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,25,712 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் 56,589 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 10,680 வாக்குகள் பெற்றுள்ளார்.