ஜூலை 13, பஹ்ரைச் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பஹ்ரைச் மாவட்டம், கோதகி கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவரை, விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று தீண்டி இருக்கிறது. இதனையடுத்து, அவர் பாம்பை பிடித்துவிட, அதனை சாக்குப்பையில் போட்டு விரைந்து அங்குள்ள மருத்துவமனைக்கு வந்தார். Speeding Bus Collied with Lorry: அதிவேகத்தில் தறிகெட்டு இயங்கிய தனியார் பேருந்து.. லாரி மீது மோதி ஒருவர் துடிதுடிக்க பலி.! பதறவைக்கும் காட்சிகள் உள்ளே.!
இளைஞரின் சாதுர்ய செயலால் உயிர்பிழைப்பு:
மருத்துவமனையில் தன்னை பாம்பு கடித்துவிட்டதாகவும், அதனை சாக்கு பையில் கொண்டு வந்துள்ளதாகவும் மருத்துவ பணியாளர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, விரைந்து சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். காவல்துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் பாம்பை மீட்டனர். பின் பாம்பின் வகையை உறுதி செய்து, அதற்கேற்ப இளைஞருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. தகவலை அறிந்ததும் மருத்துவமனைக்கு விரைந்த பாவ்டி காவல்துறையினர் மற்றும் சரக வனத்துறை அதிகாரிகள், பாம்பை அடையாளம் கண்டு இளைஞருக்கு சிகிச்சை அளிக்க உறுதுணையாக இருந்துள்ளனர். பாம்பும் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பத்திரமாக விடுவிக்கப்பட்டது.
Uttar Pradesh: In Bahraich, a youth showed bravery after being bitten by a snake by transporting the venomous snake in a bag to the hospital. Doctors were alarmed to find the snake in the bag. They promptly treated the youth, saving his life. The incident occurred in Kodahi… pic.twitter.com/lbyNRkX4Zl
— IANS () July 13, 2024