EVKS Elangovan Latest Speech: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி.. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பரபரப்பு பேட்டி.!

இடைத்தேர்தலில் தங்களது கூட்டணி கட்சிதானே களம்காண்கிறது என அல்லாமல், தனது கட்சிக்கான வெற்றி போல ஓடோடி உழைத்த திமுக அமைச்சர்கள், தொண்டர்களுக்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மனத்தார்ந்த நன்றி தெரிவித்தார்.

E.V.K.S Elangovan with Congress Party Flag (Photo Credit: Scroll.in)

மார்ச் 02: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் (Erode East By Poll 2023) கடந்த பிப்ரவரி 27ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் (DMK Alliance) வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (E.V.K.S Elangovan), அதிமுக கூட்டணி (AIADMK Alliance) சார்பில் கே.எஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக களமிறங்கினர். மொத்தமாக சுயேச்சை உட்பட 77 வேட்பாளர்கள் களமிறங்கி இருந்தனர்.

திமுக கூட்டணி கட்சிக்கு வாக்குகளை சேகரிக்க திமுக அமைச்சர்கள் (DMK Ministers), கூட்டணிக்கட்சி தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள், ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் (Kamal Hassan) உட்பட பலரும் ஈடுபட்டு இருந்தனர். அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர், அமைச்சர்கள் கலந்துகொண்டு இருந்தனர். ஆனால், அதிமுகவில் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் (O. Panneer Selvam & Edappadi Palanisamy Seperation) என 2 அணிகள் பிரிந்தது செயல்பட்டதால் அவர்களின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் உட்பட கட்சியின் மூத்த தலைவர்களும் களப்பணியில் ஈடுபட்டனர். நாம் தமிழர் சார்பில் சீமான் பல இடங்களில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். Rosalia Wear Modern: மேலேயும், கீழேயும் கிழித்துவிட்டு என்னம்மா ட்ரஸ் இது… பார்க்கப்பார்க்க பரிதவிக்கும் ரசிகர்கள்.!

இன்று மார்ச் 02, 2023 அன்று தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணி முதலாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில், 5 சுற்றுகளிலும் முன்னிலை பெற்ற திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 39,751 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். அதிமுக வேட்பாளர் 13,574 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 2,629 வாக்குகள் பெற்றுள்ளார். தேமுதிக வேட்பாளர் 386 வாக்குகளை பெற்றுள்ளார். திமுக - அதிமுக வாக்கு வித்தியாசம் கிட்டத்தட்ட 26 ஆயிரம் வாக்குகளை கடந்துவிட்டது.

Udhayanidhi Stalin With EVKS Elangovan | Visuals from Erode By Poll Election Campaign (Photo Credit: Twitter)

இந்நிலையில், தொடர் முன்னிலையை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், "இந்த வெற்றிக்கு முழு காரணம் மு.க ஸ்டாலின். அவருக்கே வெற்றி சென்றுசேரும். அவர் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதியில் 80% வாக்குகளை நிறைவேற்றியுள்ளார். அதனாலேயே மக்கள் வெற்றியை தந்துள்ளனர். மதசார்பற்ற கூட்டணி மீதும், ராகுல் காந்தி மீதும் தமிழக மக்கள் வைத்துள்ள அன்பு, பாசத்திற்கு எடுத்துக்காட்டு இந்த வெற்றி..ராகுல் காந்தி 3,500 கி.மீ தூரத்தை நடைபயனத்தால் சாதித்துள்ளது தமிழக மக்களுக்கு பிடித்துள்ளது.

என்னுடைய முக்கிய குறிக்கோளாக ஈரோட்டில் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து மறைந்த மகனுடனும், அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடன் ஏற்கனவே பேசியிருக்கிறேன். ஈரோடு மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இருக்கும் பேரவையில், நானும் உறுப்பினராக பங்கேற்பது பெருமை. மு.க ஸ்டாலின் என்னைவிட வயதில் சிறியவராக இருந்தாலும் அனுபவத்தால், தியாகத்தால் உயர்ந்தவர். அவருடன் இருப்பது எனக்கு பெருமை. இந்த தேர்தல் வெற்றி நாடாளுமன்றத் தேர்தலுழும் எதிரொலிக்கும். Erode East By Poll Result 2023: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்; காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை.!

தமிழகத்தில் மதசார்பற்ற கூட்டணி பெரும் வெற்றி அமையும். திமுக அமைச்சர்களின் உழைப்பு சாதாரணமானது கிடையாது. கடுமையாக காலையிலும், மாலையும் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். கமல் ஹாசன், கனிமொழி, உதயநிதி ஆகியோரின் பிரச்சாரம் மக்களில் ஒருவராக இருந்தது. மக்கள் அவர்கள் தங்களின் வீட்டு பிள்ளைகளாக எண்ணினார்கள். முதல்வர் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மிகச்சிறப்பாக பேசினார்கள். முதல்வரின் மீதான மரியாதையை பன்மடங்கு உயர்ந்துள்ளது.

ஈரோடு மக்கள் அனைவராலும் முதல்வரின் பேச்சு கவனிக்கப்பட்டது. மகன் விட்டுச்சென்ற பணிகளை நான் முடிப்பேன். என்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாரே தேர்தல் ஆணையம் சரியாக நடந்தகாக கூறுகிறார். பிறர் கூறும் பொய்களை கண்டுகொள்ள தேவையில்லை" என பேசினார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் மார்ச் 02, 2023 12:26 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).