Wooden Cotton Fire Accident: மர குடோனில் பயங்கர தீ விபத்து - போராடி தீயை அணைத்த தீயணைப்பு படையினர்.!

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Fire Explosion (Photo Credit: Pixabay)

மார்ச் 18, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரில் ஜெகன் என்பவர் மர குடோன் வைத்துள்ளார். நேற்று இரவு 11.30 மணியளவில் மர குடோனில் திடீரென பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். Actress Jayamalini Speech: “சில்க் சுமிதா செய்த மிகப்பெரிய தவறு” – நடிகை ஜெயமாலினி பேட்டி..!

உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொருக்குப்பேட்டை தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் முயற்சியில் போராடி உள்ளனர். இதுகுறித்த விசாரணையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் குடோனில் பணியாட்கள் யாரும் இல்லை. ஆனால் அருகில் உள்ள மற்றொரு கடையில் கட்டிடப் பணிகள் நடைப்பெற்றுள்ளது. இதன் மூலம் அங்கு பணியில் இருந்த வெல்டிங் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கையில் அந்த தீப்பொறி மரத்துகள்கள் சேர்த்து வைத்திருந்த பகுதியில் விழுந்து தீ பற்றிக்கொண்டு  விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிந்துள்ளது.

இந்த விபத்தில் சுமார் 20 டன் மரக்கட்டைகள் இருந்த நிலையில், அதில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள மரக்கட்டைகள் தீயில் எரிந்து வீணாகியதாக தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.