மார்ச் 18, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா தனது 35 வயதில் 1996-ஆம் ஆண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆனால், பலரும் அவர் சாவில் மர்மம் இருப்பதாக கூறிவந்தனர். மேலும், அவருடைய வாழ்க்கை படமாகவும் எடுக்கப்பட்டது. இந்நிலையில், கவர்ச்சி நடிகை ஜெயமாலினி தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில், “சில்க் சுமிதா குறுகிய காலத்திலேயே பெயரும், புகழும், பணமும் சம்பாதித்தவர். மேலும், அவர் படப்பிடிப்பு தளத்தில் எங்களுடன் பேச மாட்டார். நான் மற்றும் எனது சகோதரி ஜோதி லட்சுமி, சில்க் சுமிதா என நாங்கள் மூன்று பேரும் ஒரு படத்தில் கதாநாயகனை சுற்றி வரும் நடிகைகளாக நடித்து உள்ளோம். Teenage Girl Pregnancy: இளம்பெண் கர்ப்பம் – திருமண ஆசை காட்டி ஏமாற்றிய வாலிபர்..!
மேலும் அவர் கூறுகையில், சில்க் சுமிதா அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய தவறு ஒன்றை செய்துவிட்டார். காதலிப்பது தவறில்லை, ஆனால் அவர் தனது தாயாரையும், சகோதரனையும் விட்டுவிட்டு அவர் காதலித்த ஒருவரை மட்டும் நம்பி வாழ்ந்தார். உறவினர்கள் அருகில் இருந்தால் அவர்கள் பாதி எடுத்துக்கொண்டாலும் மீதி கொஞ்சம் நமக்காக வைப்பார்கள். ஆனால், சில்க் சுமிதா ரத்த சொந்தம் இல்லாத ஒருவரை மட்டும் நம்பி வாழ்ந்ததனால் மேலும், இவருக்கு சொந்தம் பந்தம் ஆதரவு இல்லை என்று தெரிந்தவுடம் எல்லாரும் ஏமாற்றுவார்கள். இவ்வாறு தான் சில்க் சுமிதாவும் உயிரிழந்துவிட்டார்” என கூறியுள்ளார்.