Diwali 2023 Celebration: குவியும் மக்கள் வெள்ளம்.. 18 ஆயிரம் காவல்துறையினரை பாதுகாப்புக்காக களமிறங்கிய சென்னை காவல்துறை.!

தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், கோயம்பேடு உட்பட பல பகுதிகளில் தீபாவளியின்போது கூட்டம் நிரம்பி வழியும்.

T. Nagar Crowd Deepawali 2023 (Photo Credit: @ANI X)

நவம்பர் 07, சென்னை (Chennai News): இந்தியா முழுவதும் தீபஒளிப்பண்டிகை திருநாளானது, நவம்பர் 14ம் தேதி சிறப்பிக்கப்படவுள்ளது. உலகெங்கும் உள்ள இந்துக்களும் தீபஒளியை கொண்டாடவுள்ளனர். இதற்காக குடும்பம் குடும்பமாக புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க கடைகளில் கூட்டம் குவிந்து வருகிறது.

இந்நிலையில், தலைநகர் சென்னையில் கோடிக்கணக்கில் மக்கள் தீபஒளி பண்டிகையை முன்னிட்டு தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு புத்தாடை, வீட்டுக்கு தேவையான புதிய பொருட்கள் போன்றவற்றை வாங்க கடைகளில் குவிவார்கள்.

எப்போதும் தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், கோயம்பேடு உட்பட பல பகுதிகளில் கூட்டம் நிரம்பி வழியும். சொந்த ஊர்களுக்கு புறப்படும் பலரும், கோயம்பேடு பேருந்து நிலையம், தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்படும் தாம்பரம், பூந்தமல்லி, கே.கே நகர் உட்பட பல்வேறு இடங்களிலும் திரளுவார்கள். Villivakkam Man Arrested: நாட்டு வெடிகுண்டுடன் வலம்வந்த ரௌடி; விசாரிக்கச்சென்ற காவலர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. அதிரடி கைது.! 

இதனால் மக்கள் கூட்டத்தை சமாளிக்கவும், கூட்டநெரிசலை பயன்படுத்தி குற்றச்செயலில் ஈடுபடுவோரை கண்காணித்து குற்றங்களை தடுக்கவும், மக்களின் பயணத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் காவல் துறையினர் சென்னையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தமாக சென்னை நகரம் முழுவதும் சுமார் 18 ஆயிரம் காவல்துறையினர் பொதுமக்கள் பாதுகாப்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், தீபாவளி மற்றும் அதனைத்தொடர்ந்து உள்ள விடுமுறை நாட்களில், மக்கள் மெரினா கடற்கரை உட்பட பல சுற்றுலாத்தலங்களுக்கும் செல்வார்கள். இதனால் அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.