வானிலை: கொட்டித்தீர்க்கபோகும் பேய் மழை.. இன்றும், நாளையும் ரெட் அலர்ட்.. இன்றைய, நாளைய வானிலை அறிவிப்பு இதோ.!

மழை அறிவிப்புகளை தெரிந்துகொள்ள, எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) செய்தி நிறுவனத்துடன் இணைந்திருங்கள்.

Tomorrow Weather (Photo Credit: LatestLY)

நவம்பர் 30, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தை பொறுத்தவரையில், தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவையிலும்‌ மழை பெய்துள்ளது. காரைக்கால்‌ பகுதிகளில்‌ மிக லேசான மழை பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்‌தில்‌ எண்ணூரில் 13 செமீ மழையும், கத்திவாக்கத்தில் 12 செமீ மழையும் அதிகபட்சமாக பெய்துள்ளது.

பெஞ்சல் புயலின் நிலை:

தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவும்‌ “ஃபெஞ்சல்‌” புயல்‌ வடமேற்கு திசையில்‌ நகர்ந்து, இன்று (30-11-2024) காலை 08:30 மணி அளவில்‌ அதே பகுதிகளில்‌ புயலாக, புதுவையிலிருந்து சுமார்‌ கிழக்கு-வடகிழக்கே 120 கிலோ மீட்டர்‌ தொலைவிலும்‌, சென்னையிலிருந்து தென்கிழக்கே 110 இலோ மீட்டர்‌ தொலைவிலும்‌, நாகபட்டினத்திலிருந்து வடக்கு-வடகிழக்கே 200 கிலோ மீட்டர்‌ தொலைவிலும்‌ நிலை கொண்டுள்ளது. இது மேற்கு திசையில்‌ நகர்ந்து வடதமிழக - புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும்‌ - மகாபலிபுரத்‌திற்கும்‌ இடையே, புதுவைக்கு அருகே இன்று மாலை புயலாக கடக்கக்கூடும்‌. அச்சமயத்தில்‌ காற்றின்‌ வேகம்‌ மணிக்கு 70 முதல்‌ 80 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 90 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. Fengal Cyclone Clouds in Chennai: சென்னையை சுத்துப்போட்ட புயல் மேகங்கள்; அசத்தல் 3டி காட்சிகள் இங்கே.! 

இன்றைய வானிலை (Today Weather):

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில், 30-11-2024 இன்று தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. 01-12-2024 அன்று தமிழகத்‌தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

நாளைய வானிலை (Tomorrow Weather):

02-12-2024 அன்று தமிழகத்‌தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌ மற்றும்‌ ஈரோடு மாவட்டங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, தேனி மற்றும்‌ மதுரை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

டிச.03 முதல் 05 வரை மழை எச்சரிக்கை:

03-12-2024 அன்று தமிழகத்‌தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மற்றும்‌ ஈரோடு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 04-12-2024 அன்று தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. 05-12-2024 மற்றும்‌ 06-12-2024 வரையில் தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

தரைக்காற்று எச்சரிக்கை:

30-11-2024 இன்று நாகப்பட்டினம்‌, திருவாரூர்‌, தஞ்சாவூர்‌, புதுக்கோட்டை, பெரம்பலூர்‌, அரியலூர்‌, திருச்சி, கள்ளக்குறிச்‌சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 70 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. 01-12-2024 (நாளை) வடதமிழக கடலோர மற்றும்‌ அதனை ஒட்டியுள்ள பகுதிகளில்‌ பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும்‌ - நாகப்பட்டினம்‌, திருவாரூர்‌, தஞ்சாவூர்‌, மயிலாடுதுறை, அரியலூர்‌, கடலூர்‌, விழுப்புரம்‌, செங்கல்பட்டு, காஞ்‌சிபுரம்‌, சென்னை, திருவள்ளூர்‌ மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கிலோ மீட்டர்‌ வேகத்‌திலும்‌ இடையிடையே 70 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌. Fengal Cyclone Live Tracker: ஃபெங்கால் புயலின் Fengal Puyal நகர்வுகளை துல்லியமாக தெரிந்துகொள்வது எப்படி? லைவ் அப்டேட் இதோ.!

சென்னை (Chennai Rains) மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather):

அடுத்த 24 மணி நேரத்‌திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, ஓரிரு இடங்களில்‌ அதி கனமழையும்‌ பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்‌சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

30-11-2024 இன்று வட தமிழக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல்‌ 80 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 90 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌, தென்தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல்‌ 65 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 75 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

01-12-2024 அன்று வட தமிழக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல்‌ 66 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 75 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌, தென்தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌ என்பதால் அப்பகுதிக்கு மேனேஅவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாலை 04:00 மணிவரை இங்கெல்லாம் மழை:

இன்று (30 நவ. 2024) மாலை 04:00 மணிவரையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழைக்கான சிகப்பு எச்சரிக்கையும், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மிக ஆரஞ்சு எச்சரிக்கையும், திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கான வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு: