Fengal Cyclone Clouds 3D Mode (Photo Credit: @ChenaniRMC X)

நவம்பர் 30, தாம்பரம் (Chennai News): வங்கக்கடல் பகுதியில் உருவாகி, தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் ஃபெங்கால் புயலின் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மழை மேகங்கள் சூழ்ந்து, மழைப்பொழிவு மற்றும் பலத்த தரைக்காற்று அதிகரித்து இருக்கிறது. புயல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும். Breaking: ரூட்டை மாற்றிய Fengal Puyal ஃபெங்கால் புயல்... கரையை கடக்கும் இடம், நேரம் மாற்றம்.! 

முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்:

இந்நிலையில், புயலின் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐடி போன்ற சாதகமான பணியிடங்களில், பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து வழக்கம்போல இயக்கப்பட்டாலும், மக்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதால், தேவையான போக்குவரத்து இயக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. புயலினால் கனமழை பெய்தாலும், அதனால் சேதம் ஏற்பட்டாலும் மீட்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட தயாராக இருக்கின்றனர்.

3டி காட்சிகள் வெளியீடு:

சென்னையில் நேற்று இரவு முதல் தொடங்கிய மிதமான மழை, அதிகாலை 4 மணிக்கு மேல் கனமழையாக தொடருகிறது. இதனால் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கி இருக்கிறது. புயலின் மழை கொடுக்கும் மேகங்கள் சென்னையை சூழ்ந்து காணப்படுவதால், மழை தொடர்ந்து வருகிறது. இதனிடையே, சென்னையை புயலின் மேகங்கள் சூழ்ந்துள்ள முப்பரிமாண காட்சிகளை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

சென்னையை சூழ்ந்துள்ள புயலின் மேகங்கள்: