நவம்பர் 30, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வலுவிழந்து, பின் புயலாக வலுப்பெற்ற ஃபெங்கால் புயல் (Fengal Cyclone) மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் சென்னையில் இருந்து 180 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 190 கிமீ தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 210 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் (Fengal Puyal) இன்று பிற்பகல் நேரத்தில் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. Cyclone Fengal: உருவானது ஃபெங்கல் புயல்... எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்? வானிலை ஆய்வு மையம் தகவல்..!
வேகம் குறைந்தது:
நேற்று வரை சுமார் 12 முதல் 13 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த ஃபெங்கால் புயலின் வேகம் தற்போது குறைந்து, மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் கரையை கடக்க இன்னும் சில மணிநேரங்கள் இருப்பதால், வடகடலோர பகுதிகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் பாதிப்பு ஏற்படவுள்ள மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் நகர்வுகளை நாம் Windy.com ல் நேரலையாக கூட காணலாம். அதன் உட்பொதிவும் உங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
புயலின் நகர்வுகளை நேரலையில் காண: