Gold Silver Price: தங்கம் விலை இன்று ஒரேநாளில் ரூ.800 குறைவு.. நகை பிரியர்களே இன்றைய நாளை தவறவிடாதீங்க..!

இன்று ஒரேநாளில் ரூ.800 அளவில் அதன் விலை குறைந்து இருக்கிறது.

Gold Silver Price (Photo Credit: Pixabay)

நவம்பர் 24, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நிலவிவரும் பொருளாதார சிக்கல், மத்திய கிழக்கு பதற்றம், உக்ரைன்-ரஷியா போர் உலகளவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பங்குசந்தைகளில் மாற்றம் ஏற்பட்டு பல நாடுகள் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில் தங்கம், வெள்ளி பொருட்களின் விலையானது தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. அதன் மீதான வரி குறிக்கப்பட்டாலும், கடந்த 2014ம் ஆண்டில் ரூ.25 ஆயிரம் என விற்பனை செய்யப்பட்ட தங்கம், இன்றளவில் 10 ஆண்டுகளில் 2 மடங்கு விலை உயர்ந்துள்ளது. தங்கத்தின் நுகர்வு அதிகரிப்பால் விலை உச்சத்திலேயே இருக்கிறது. Couple Dies by Suicide: காதல் திருமணம் முடிந்த 2 மாதத்தில் தம்பதிகள் தற்கொலை.. திருவாரூரில் கண்ணீர் சோகம்.! 

தங்கத்தின் விலை (Gold Rate Chennai):

இந்நிலையில், நேற்று சென்னையில் சவரன் தங்கம் ரூ.58,400 க்கு விற்பனை செய்ய்யப்ட்டது. இன்று சென்னையில் விற்பனை செய்ய்யப்படும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அளவில் குறைந்து, ரூ.57,600 க்கு விற்பனை சிஐயப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலையானது ரூ.7,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தில் சவரன் தங்கம் விலை ரூ.3 ஆயிரம் வரை உயர்ந்து இருந்த நிலையில், தற்போது குறைந்து இருக்கிறது. வெள்ளியின் விலையை பொறுத்தமட்டில் கிராம் ரூ.101 க்கும், கிலோ ரூ.1,01,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif