TVK Members Stabbed Over Poster Dispute: தளபதியின் கோட் பட போஸ்டர் ஒட்டுவதில் தகராறு.. த.வெ.க. நிர்வாகிகளுக்குள் கத்திக்குத்து..!
தளபதியின் கோட் பட போஸ்டர் ஒட்டுவதில் ஏற்பட்ட தகராறில் வேலூர் த.வெ.க. நிர்வாகிகளுக்குள் கத்திக்குத்து தகராறு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 13, வேலூர் (Tiruvallur News): நடிகர் விஜய் (Thalapathy Vijay) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Greatest of All Time) படம் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற்றது. மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தி கோட்: படத்தில் விஜய் முன்று பாடல்கள் பாடியுள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியானது. இந்த இரண்டு பாடல்களிலும் விஜய் பாடியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ளது. தொடர்ந்து படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் கட்சியின் பெயரை பயன்படுத்தக்கூடாது என தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகின.
இந்நிலையில் தளபதியின் கோட் பட போஸ்டர் ஒட்டுவதில் ஏற்பட்ட தகராறில் வேலூர் த.வெ.க. நிர்வாகிகளுக்குள் கத்திக்குத்து தகராறு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளூர் எம்.ஜி.ஆர் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன் (44). இவர் தமிழக வெற்றிக் கழக குடியாத்தம் ஒன்றிய தலைவராக உள்ளார். அதேபகுதியில் தமிழக வெற்றிக் கழக வேலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினராக செல்வம் உள்ளார். Director Cheran: ஹாரன் அடித்து வம்பு வளர்த்த தனியார் பேருந்து ஓட்டுநர்; நடுரோட்டில் சம்பவம் செய்த இயக்குனர் சேரன்.!
போஸ்டர் ஒட்டுவதில் தகராறு: கடந்த 10-ம் தேதி அன்று, கோட் படத்தின் போஸ்டர்கள் குடியாத்தம் நகரில் ஓடக்கூடிய ஆட்டோக்களில் சிலரால் ஒட்டப்பட்டது. அதில், வேறு ஒருவரின் போன நம்பர் பதிவிடப்பட்டு இருந்தது. இதனால் கோவமடைந்த கலைச்செல்வன், செல்வத்திடம் சென்று கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து செல்வத்தின் கூட்டாளிகள் ஒன்றியத் தலைவர கலைச்செல்வன் வீட்டிற்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரண்டு பேருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கத்திக குத்தாக மாறியது. இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் காவல் துறையினர் ஒன்றிய தலைவர் கலைச்செல்வனின் குடும்பத்தை கூண்டோடு தூக்கி சிறையில் அடைத்தனர்.
நிர்வாகிகளுக்குள் கத்திக்குத்து: இது சம்பந்தமாக புஸ்ஸி ஆனந்த் வரை இரு தரப்பும் மாறி மாறி புகார் அளித்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில் இப்போது கத்துகுத்து வரை சென்றுள்ளது. தொடர்ந்து மற்றெரு தரப்பை கைது செய்யாமல் விட்டுவிட்டது அவரகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்து இருக்கிறார் கலைச் செல்வன் மனைவி உஷா ராணி. இதில் விஜய் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ரசிகரகளின் கோரிக்கையாக உள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)