கடலூர்: 17 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை.. வேதியியல் ஆசிரியர் அதிர்ச்சி செயல்..!

வேதியியல் ஆசிரியர் தன்னிடம் பயின்று வந்த 17 வயது சிறுமியை சீரழித்து கர்ப்பமாக்கிய நிலையில், சென்னையில் கல்லூரியில் பயின்று வந்த மாணவிக்கு குழந்தை பிறந்த சோகம் நடந்துள்ளது.

Sexual Abuse | Rape File Pic (Photo Credit: Pixabay)

டிசம்பர் 19, சேத்தியாத்தோப்பு (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு (Sethiathoppu School Girl Rape) பகுதியில், அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் 17 வயதுடைய மாணவி, இங்கு பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். தற்போது மாணவி சென்னையில் செயல்பட்டு வரும் கல்லூரியில் பி.எஸ்சி., நர்சிங் துறையில் பயின்று வருகிறார்.

குழந்தை பிறந்தது:

இதனிடையே, மாணவிக்கு திடீரென கடந்த 4 நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது. இதனால் அதிர்ந்துபோன பெற்றோர் மாணவியிடம் கர்ப்பத்திற்கான காரணம் குறித்து விசாரித்தனர். அப்போது, மாணவி கூறிய பதில்கள் கடும் அதிர்ச்சியை பெற்றோருக்கு ஏற்படுத்தியுள்ளது.

வேதியியல் ஆசிரியர் மீது புகார்:

அதாவது, பள்ளியில் பயின்றுவரும்போது, வேதியியல் ஆசிரியர் தன்னை பலாத்காரம் செய்ததாகவும், அதனால் குழந்தை பிறந்ததாகவும் கூறி அதிரவைத்துள்ளார். இந்த விஷயம் குறித்து மாணவியின் பெற்றோர் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருமணமான 3 ஆண்டுகளில் குழந்தையில்லாத ஏக்கம்.. 27 வயது இளம்பெண் மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலை.! 

நட்பாக பழகி பலாத்காரம்:

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசரணையில், மாணவி பள்ளியில் படிக்கும்போது, வேதியியல் ஆசிரியரான புடையூர் கிராமத்தைச் சேர்ந்த மலர் செல்வம் (வயது 50), சிறுமியிடம் நட்பாக பேசுவது போல பழகி இருக்கிறார்.

தற்போது தலைமை ஆசிரியர்:

பின் ஒரு கட்டத்தில் மாணவியை ஏமாற்றி தனிமையில் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமான நிலையில், சென்னையில் கல்லூரியில் படித்து வந்தபோது பிரசவமும் நடந்துள்ளது. இதனால் தற்போது பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் மலர் செல்வத்தை, காவல்துறையினர் போக்ஸோவில் கைது செய்தனர்.

போக்ஸோவில் கைது:

பதவி உயர்வு பெற்று உதவி தலைமை ஆசிரியராக பொறுப்பில் இருந்த மலர் செல்வம், திருமணம் முடிந்து மனைவி, 2 மகள்கள், 1 மகன் என குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே தான் மலர் செல்வம் சிறுமியை சீரழித்து கர்ப்பமாக்கி, தற்போது குழந்தை பிரசவத்திற்கு காரணமாக அமைந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது. கைதுக்கு பின்னர் மலர் செல்வம் சிறையில் அடைக்கப்பட்டார்.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif