IPL Auction 2025 Live

அரிசி பைக்குள் ரூ.15 இலட்சம்.. வாடிக்கையாளருக்கு அடித்த ஜாக்பாட்?.. காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் புகார்.!

பணம் வைத்திருந்த அரிசி பையை தவறுதலாக பணியாளர் வாடிக்கையாளரிடம் கொடுத்துவிட, பணத்தை கேட்டு சென்றபோது 5 இலட்சம் மாயமானதாக புகார் எழுந்துள்ளது.

Shanmugam | Vadalur Rice Shop Owner (Photo Credit: Facebook)

அக்டோபர் 24, வடலூர் (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் (Vadalur), நெய்வேலி மெயின் ரோடு பகுதியில் சண்முகா அரிசி, நெல் மண்டி செயல்பட்டு வருகிறது. இந்த கடையை சண்முகம் என்பவர் நடத்தி வருகிறார். இவரின் கடையில் சண்முகத்தின் உறவினர் ஒருவரும் வேலை பார்த்து வருகிறார். கடையில் வசூலாகும் பணத்தை சண்முகம் எப்போதும் சாதுர்யமாக இரவு நேரங்களில் கல்லாப்பெட்டியில் வைக்காமல், அரிசி பைகளில் மறைத்து வைத்துச்செல்வது வழக்கம் என கூறப்படுகிறது.

அரிசி பைக்குள் ரூ.15 இலட்சம்:

இதனிடையே, கடந்த திங்கட்கிழமை அன்று சண்முகம் தனது கடைக்கு தாமதமாக வந்துள்ளார். அவரின் உறவினர் பணியில் இருந்த நிலையில், சண்முகம் மறைத்து வைத்த பணம் கொண்ட அரிசி சாக்கினை தவறுதலாக வாடிக்கையாளருக்கு கூடுதலாக அரிசி சேர்த்து விநியோகித்துள்ளார். அரிசி பைக்குள் இருந்த பணம் தெரியாமல் பணியாளரும் கொடுக்க, வாடிக்கையாளரும் அதனை எடுத்து சென்றுள்ளார். அரிசிக்கான தொகையை ஜி-பே வாடிக்கையாளர் செலுத்தியுள்ளார். Pink Auto: பெண்களின் வாழ்க்கையில் அடுத்த ஒளிவிளக்கை ஏற்றும் தமிழக அரசு; "பிங்க் ஆட்டோ".. உடனே விண்ணப்பிங்க... விபரம் உள்ளே.! 

ஜி-பே நம்பர் உதவி:

சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த சண்முகம், பணம் வைத்திருந்த அரிசி பை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின் உறவினரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, அவர் அரிசி பையை வாடிக்கையாளரிடம் கூடுதல் அரிசி சேர்த்து கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவர் பணம் செலுத்திய ஜி-பே நம்பரை எடுத்து, வாடிக்கையாளரின் முகவரியை சண்முகம் கண்டறிந்துள்ளார்.

5 இலட்சம் வராததால் காவல் நிலையத்தில் புகார்:

அரிசியை வாங்கிச்சென்ற பூபாலன் என்பவரின் வீட்டிற்கு சென்று விபரத்தை கூறியபோது, அவரின் மகள் தாட்சாயிணி அரிசி பைக்குள் ரூ.10 இலட்சம் மட்டுமே இருந்ததாக கூறி பணத்தை கொடுத்துள்ளார். எஞ்சிய ரூ.5 இலட்சம் பணம் அரிசி பைக்குள் தனி காட்டாக இருந்ததால், இந்த விஷயம் தொடர்பாக சண்முகம் தற்போது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற அதிகாரிகள் இருதரப்பையும் நேரில் அழைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி, எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என சண்முகம் கோரிக்கை வைத்துள்ளார்.