16 Aged Boy Killed by Father: பெற்றெடுத்த மகனை போதையில் கல்லால் அடித்துக்கொன்ற தந்தை; முகத்தை சிதைத்து நடந்த பயங்கரம்.. தமிழகமே அதிர்ச்சி.!
அம்மாவை அழைத்து வரலாம் என மகனை தன்னுடன் கூட்டிவந்த தந்தை, போதையில் சொந்த மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெண்ணகரத்தில் நடந்துள்ளது.
ஜூன் 15, பென்னாகரம் (Dharmapuri News): தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் (Pennagaram Minor Boy Killed), தாசம்பட்டி கிராமத்தில் அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்திற்கு மிக அருகில், கடந்த 13ம் தேதி சிறுவன் ஒருவரின் சடலம் கிடந்தது. முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்ட்டவரு சடலம் கிடந்த நிலையில், அதனைக்கண்ட உள்ளூர் மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
முகம் சிதைக்கப்பட்டு கொடூரம்:
தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த பென்னாகரம் காவல் துறையினர், சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், நிகழ்விடத்திற்கு மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அதில் எந்த தடயமும் கிடைக்கவில்லை. சிறுவனின் முகம் சிதைக்கப்பட்டு இருந்த நிலையில், அவரின் அடையாளம் காணும் பணியும் நடைபெற்றது.
பதினோராம் வகுப்பு மாணவர் கொலை:
அப்போது, சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் பென்னாகரம், திப்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் பெருமாள் என்பவரின் மகன் யாதவன் (வயது 16) என்பது உறுதியானது. இவர் அங்குள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சிறுவனின் கொலை சம்பவம் குறித்து 2 தனிப்படைகள் அமைத்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, சந்தேகத்தின் பேரில் சிறுவனின் தந்தை பெருமாளிடம் விசாரணை நடந்தது. Toddler Died fallen into Borewell: 50 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை பலி; கண்ணீரில் பெற்றோர்.!
தந்தையின் பதறவைக்கும் செயல்:
விசாரணையின்போது, மகனை தானே கொலை செய்ததாக சிறுவனின் தந்தை வாக்குமூலம் அளித்து குற்றத்தை ஒப்புக்கொண்டு அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்தார். கொலைக்கான கரணம் குறித்து அவர் கூறுகையில், "எனது பெயர் பெருமாள். எனக்கு குமுதா என்ற மனைவி இருக்கிறார். எங்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். கணவன் - மனைவியான எங்களுக்கு இடையே அவ்வப்போது குடும்பத்தகராறு ஏற்படுவது உண்டு.
மதுபோதையில் அதிர்ச்சி செயல்:
சம்பவதத்ன்று நடந்த தகராறுக்கு பின் மனைவி குமுதா, எனது 2 மகன்களுடன் தாசம்பட்டியில் இருக்கும் உறவினரின் வீட்டிற்கு சென்றார். பள்ளிகள் திறந்ததும் மகன்கள் ஊருக்கு வந்துவிட, இளையமகனை வால்பாறையில் செயல்பட்டு வரும் பள்ளியில் கொண்டு சேர்த்தேன். பின் வீட்டிற்கு மதுபோதையில் வந்தேன். அங்கு மகன் யாதவன் பள்ளிக்கு செல்ல தயாராக இருந்தார்.
குற்றவாளி சிறையில் அடைப்பு:
அங்கு மகனிடம் அம்மாவை அழைத்து வரலாம் என 4 மணிக்கு தாசம்பட்டிக்கு வந்தேன். ஊர் எல்லையில் நான் இருந்துகொண்டு, அம்மாவை அழைத்துவர மகனிடம் கூறி தாக்கினேன். மகன் மறுப்பு தெரிவித்த காரணத்தால், ஆத்திரத்தில் அவரை கல்லால் அடித்துக் கொலை செய்தேன்" என கூறி இருக்கிறார். இந்த அதிர்ச்சி உண்மையை அறிந்துகொண்ட காவல் துறையினர், பெருமாளை கைது செய்தனர். மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)