Dharmapuri Shocker: பிரியாணி கடைக்குள் புகுந்து ஊழியர் சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!

கடந்த சில மாதங்களாகவே அரசியல் ரீதியான கொலைகள் தமிழகத்தை அதிரவைத்துள்ள நிலையில், ஆங்காங்கே நடைபெறும் படுகொலை சம்பவங்கள் மக்களை பதறவைத்துள்ளது.

Murder | Crime File Pic (Photo Credit: Pixabay)

ஜூலை 27, இலக்கியம்பட்டி (Dharmapuri News): தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இலக்கியம்பட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பிரபலமான தொப்பி வாப்பா பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை திறந்து சில வாரங்களே ஆகின்றன. நேற்று கடையில் முகமது யாசிக் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். கடையில் அவருடன் ஊழியர்களும் இஇருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் கடையில் சாப்பிட வந்த 4 பேர், முகமது யாசிக்கிடம் பேச்சுக்கொடுத்தவாறு திடீரென கீழே தள்ளி கத்தி, அரிவாள் உட்பட ஆயுதத்தால் சரமாரியாக வெட்டிசாய்த்தனர். கொலை சம்பவத்தை அரங்கேற்றிய கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. Woman Burnt To Death: ஏரிக்கரையில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு; விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

மர்ம கும்பலுக்கு அதிகாரிகள் வலைவீச்சு:

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், இரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த முகமதுவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் முகமது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த தனிப்படை காவல்துறையினர், சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முகமது கொலை செய்யப்பட்டது எதனால்? அவர் யாரால் கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி வைரலாகி வருகின்றன. தனிப்படை அமைத்து கொலையாளிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது.

வீடியோ நன்றி: நியூஸ் தமிழ் 24X7

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement