Tamilnadu Shocker: 13 பள்ளி மாணவிகளை சீரழித்த அரசியல் கட்சி பிரமுகர்.. தமிழகமே அதிர்ச்சி.. என்.சி.சி வகுப்பு பேரில் அட்டூழியம்.!
இந்த விவகாரத்தில் பள்ளியின் முதல்வர், தாளாளர் உட்பட 7 பேர் கைதாகி இருக்கின்றனர்.
ஆகஸ்ட் 19, காவேரிப்பட்டினம் (Krishnagiri News): கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டினம் (Kaveripattinam) பகுதியில் வசித்து வருபவர் சிவராமன். இவர் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்து வந்தார். மேலும், கிருஷ்ணகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள தனியார் பள்ளிகளில், தேசிய மாணவர் படை (National Cadet Corps NCC) அமைப்பின் பயிற்றுநராகவும் விளங்கி வந்துள்ளார்.
காவல் நிலையத்தில் புகார்:
இதனிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன், சில பள்ளி மாணவிகளிடம் சிவராமன் தவறான முறையில் நடந்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தால் பாதிக்கப்பட்ட மாணவிகள், தங்களின் பெற்றோரிடம் முறையிட்டு இருக்கின்றனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிவராமனின் மீது கந்திகுப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். Chennai Weather Update: அப்படிப்போடு.. சென்னையில் மப்பும் மந்தாரமுமாக மேகங்கள்.. மழையை எதிர்பார்த்து மக்கள்.!
தலைமறைவானவர் கைது:
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த தகவலை அறிந்ததும் சிவராமன் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். காவல்துறையினர் விசாரணை நடத்தி பள்ளியின் முதல்வர், தாளாளர், பயிற்சியாளர் என 7 பேரை அதிரடியாக கைது செய்தனர். இவர்களில் சிவராமன் கோவைக்கு தப்பிச்சென்ற நிலையில், அவர் கோவையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
13 மாணவிகள் பலாத்காரம்:
கைது நடவடிக்கையின்போது தப்பிச்செல்ல முயன்ற சிவராமன், தாமாக கீழே விழுந்து கால்களையும் முறித்துக்கொண்டார். அவர் தற்போது மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், 13 பள்ளி மாணவிகள் மொத்தமாக இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. 13 மாணவிகளில் 12 வயதுடைய மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் நடந்த விசாரணையில் அனைத்தும் அம்பலமாகி இருக்கிறது.
தண்டனைகள் கடுமையாக்க வேண்டும்:
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். பெங்களூரில் நேற்று பப்புக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்துகொண்டு இருந்த பெண் லிப்ட் கேட்டு பயணித்தபோது பலாத்காரம் செய்யப்பட்டார். இதனிடையே, இந்த அதிர்ச்சி தகவலும் அம்பலமாகி கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. கற்பழிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதே, இவ்வாறான குற்றங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க வழிவகை செய்யும் என்பது பலரின் ஆதங்க குரலாக இருக்கிறது.