ஆகஸ்ட் 19, சென்னை (Chennai News): தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், 19ஆம் தேதியான இன்று தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும், இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தனது நாளைய வானிலை (Tomorrow Weather) செய்திக்குறிப்பில் ஏற்கனவே தெரிவித்திருந்தது. Kalaignar 100: கலைஞர் நூற்றாண்டு ரூ.100 நாணயம் வெளியீடு; மத்திய அமைச்சருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.!
மேகமூட்டத்துடன் காணப்படும் சென்னை:
அதேபோல, தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியசும் பதிவாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை முதலாகவே சென்னை நகரின் பல்வேறு பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருவதால், காலை முதலாகவே மக்கள் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இல்லாமல் தங்களது பணியிடங்களுக்கு புறப்பட்டுள்ளனர்.
காலை 10 மணிவரை மழை:
அடுத்த சில மணி நேரங்களில் மழைக்கான சாதகமான கூற்றுகள் நிலவுவதால், மழையையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதேபோல, காலை 10 மணிவரையில் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் மிதமான மழைக்கான எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.