Reporter Dies: 33 வயதில் பத்திரிகையாளருக்கு நேர்ந்த துயரம்.. தந்தையை இழந்து தவித்தவர், உடல்நலக்குறைவால் மரணம்.!

தனியார் செய்தி நிறுவனங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த பத்திரிகையாளர், திடீர் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.

Manoj Kumar Death | File Pic (Photo Credit: Facebook / Pixabay)

நவம்பர் 25, மதுரை (Madurai News): மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 33). இவர் நியூஸ் 18 தமிழ்நாடு, நியூஸ் 7 தமிழ், பிபிசி தமிழ் உட்பட பல முன்னணி ஊடக நிறுவனத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி, தற்போது பிடிஐ செய்தி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சென்னையில் இருந்தவாறு பணிகளை கவனிக்கிறார். Gold Silver Price: தங்கம் விலை இன்று ஒரேநாளில் ரூ.800 குறைவு.. நகை பிரியர்களே இன்றைய நாளை தவறவிடாதீங்க..! 

திடீர் வலிப்பு ஏற்பட்டு சோகம்:

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சொந்த விடுப்பு எடுத்து மதுரைக்கு சென்றவர், திடீரென வலிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார். இதனால் குடும்பத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டவர், பரிதாபமாக உயிரிழந்தார். Couple Dies by Suicide: காதல் திருமணம் முடிந்த 2 மாதத்தில் தம்பதிகள் தற்கொலை.. திருவாரூரில் கண்ணீர் சோகம்.!

உடல்நலக்குறைவால் சோகம்: 

அவரின் மரணம் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தற்போது வரை திருமணம் செய்யாமல் தாய்-தந்தையை கவனித்து வந்த மனோஜ், சமீபத்தில் தான் அவரின் தந்தையை இழந்தார். இதனால் தாய் மதுரையில் வசித்து வந்த நிலையில், தற்போது மனோஜும் உடல்நலக்குறைவால் திடீரென இயற்கை எய்தினார்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement