Boy Friend Killed By Girl Friend: வேறொரு பெண்ணுடன் பேசிய காதலனை, பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற கல்லூரி மாணவி.. தமிழகமே அதிர்ச்சி.!

தனது ஆசை நாயகன் வேறொரு பெண்ணுடன் பழகி வருவதாக அறிந்துகொண்ட காதலி, காதலுடன் கடற்கரைக்கு சென்று வரும் வழியில் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் 24 வயதுடைய இளைஞர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Love Couple Mayiladuthurai | Fire Death File Pic (Photo Credit: Facebook / Pixabay).jpeg

மே 15, மயிலாடுதுறை (Mayiladuthurai News): அன்புள்ளம் கொண்ட காதலன் வேறொரு பெண்ணுடன் பேசிவந்ததை அறிந்த காதலி, ஆத்திரத்தில் காதலனை கடற்கரைக்கு அழைத்துச்சென்று பின் மீண்டும் வீட்டிற்கு (College Student Love) வரும்போது, பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் நடந்துள்ளது. கல்லூரி படிக்கும் வயதில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி, நடுரோட்டில் நடந்த கொலை முயற்சி சம்பவத்தில், 6 நாட்கள் சிகிச்சைக்கு பின் மாணவர் உயிரிழந்தது (Boy Friend Killed in Mayiladuthurai) குறித்த அதிர்ச்சி தகவலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

கல்லூரி மாணவர்களான காதல் ஜோடி: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள டவுன் ஸ்டேஷன், தெற்குத் தெருவில் வசித்து வருபவர் ராமமூர்த்தி. இவரின் மகன் ஆகாஷ் (24). இவர் பூம்புகார் பகுதியில் செயல்பட்டு வரும் கல்லூரியில், பி.காம் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி பகுதியில் வசித்து வருபவர் நாகப்பன். இவரின் மகள் சிந்துஜா. இவர் மயிலாடுதுறையில் உள்ள அரசு மகளிர் கலை & அறிவியல் கல்லூரியில் பி.ஏ பட்டம் பயின்று வருகிறார்.

2 ஆண்டு காதலில் கருத்து வேறுபாடு: இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மலரவே, கல்லூரி மாணவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, ஆகாஷ் தனது காதலி சிந்துஜாவை மறந்து வேறொரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இதுகுறித்து காதல் ஜோடிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு மற்றும் பிரச்சனை நிலவி வந்துள்ளது. Clam Oyster Gravy: உடலுக்கு ஆரோக்கியமான.. கடல் மட்டி சிப்பி கறி கிரேவி செய்வது எப்படி?.! 

காதலனை கொளுத்திவிட்ட காதலி: கடந்த 09ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் காதலி சிந்துஜாவை பூம்புகார் கடற்கரைக்கு ஆகாஷ் அழைத்து சென்றுள்ளார். பின் இருவரும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளனர். அச்சமயம் சிந்துஜா தான் வாங்கிவந்த பெட்ரோலை காதலனின் மீது ஊற்றி தீவைத்து இருக்கிறார். பலத்த தீக்காயத்துடன் அவதிப்பட்ட ஆகாஷ் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். சிந்துஜா லேசான காயங்களுடன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

காதலன் பரிதாப பலி: இந்நிலையில், காதலன் ஆகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவாரூர் நகர காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஆகாஷ் உயிரிழந்துவிட்டதால், கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement