மே 14, சென்னை (Kitchen Tips): மூன்று லட்சத்து பதினைந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் தோன்றிய "ஹோமோ செப்பியன்கள்" எனப்படும் தற்கால மனிதர்கள் கடல் வாழ் உயிரினங்களை உணவாக பயன்படுத்திய சான்றுகள் உள்ளன. இன்று வரை கடலோர கிராமங்களில் தினசரி உணவு மீன் சார்ந்த உணவாகவே இருக்கும். இந்த மீனுக்கு பதில் இன்று வித்தியாசமாக ஒன்று செய்து பாருங்கள். கடல் மட்டி சிப்பி கறி கிரேவி செய்வது எப்படி என்று இப்பதிவில் காணலாம்.
தேவையானவை:
வேகவைத்த மட்டி சிப்பி கறி - ½ கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 1 தே.க
தக்காளி - 3
சி.வெங்காயம் - 250 கி
பச்சமிளகாய் - 4
மிளகாத்தூள் - 1 ½ தே.க
கரம் மசாலா - 2 தே.க
மஞ்சள் தூள் - 1 தே.க
மிளகுத்தூள் - 1/2 தே.க
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மட்டியை வேகவைக்க: மட்டி சிப்பி ஓட்டில் மணல், கடல் பாசி இருப்பதால் இதை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.பின் அதை கழுவி கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, அதன் ஓடு திறக்கும் வரை வேக விட வேண்டும். கடல் சிப்பியில் உப்பு இருப்பதால் உப்பு போடாமலே வேக வைக்கலாம். ஓடுகள் திறந்து பின்பு உள்ளே உள்ள சதைப்பகுதியை வெளியே எடுத்து சுத்தம் செய்து லேசாக அலசி வைத்துக்கொள்ள வேண்டும். TN Weather Report: மீனவர்களுக்கான எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
கிரேவி செய்யமுறை: வானளியில் எண்ணெய் ஊற்றி கீறின பச்ச மிளகாய் மற்றும் சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். இப்போது அதனுடன் வேகவைத்த மட்டியை போட்டு கரம் மசாலா, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள்,சிறிது உப்பு சேர்த்து கிளர வேண்டும். பின் அரை கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். தண்ணீர் சிறிது வற்றியதும் கொத்தமல்லித்தலை தூவி இறக்கவும்.