Pudukkottai Shocker: சிறுமியை கிண்டல் செய்த நபரை தட்டிக்கேட்ட தந்தை குத்திக்கொலை; புதுக்கோட்டையில் பயங்கரம்.!
திருமயம் அருகே 14 வயதாகும் மகளை எதற்காக கிண்டல் செய்கிறாய்? என கேட்கச்சென்ற தந்தை, போதை இளைஞரால் குத்திக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அக்டோபர் 01, புதுக்கோட்டை (Pudukkottai News): புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம், வீரணாம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சின்ராசு. இவரின் 14 வயதுள்ள மகள், அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இதனிடையே, அதே பகுதியில் 21 வயதுடைய முருகேசன் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் சின்ராசுவின் மகளை கேலி-கிண்டல் செய்து வந்துள்ளார்.
சிறுமியின் தந்தை கண்டிப்பு:
முருகேசனின் செயல்கள் தொடர்ந்து சிறுமிக்கு வருத்தத்தை ஏற்படுத்த, அவர் தனது தந்தையிடம் தகவலை தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்ராசு, முருகேசனை நேரில் அழைத்து எச்சரித்து இருக்கிறார். அச்சமயம் முருகேசன் மதுபானம் அருந்திவிட்டு போதையில் வந்துள்ளார். Gas Cylinder Price: தொடர்ந்து உயரும் சிலிண்டர் விலை; 3 மாதங்களில் ரூ.93 உயர்வு..! இந்த மாதமும் அதிர்ச்சி.!
கத்தியால் வயிற்றில் சரமாரியாக குத்திக்கொலை:
அங்கு இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இருவரும் கைகலப்பில் ஈடுபடாமல் கடுமையான வார்தைப்போரில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதனிடையே, ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற முருகேசன், வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து சின்ராசுவின் வயிறில் சரமாரியாக குத்தி இருக்கிறார்.
காவல்துறையினர் விசாரணை:
இந்த சம்பவத்தில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சின்ராஜு, நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊர்ப் பொதுமக்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சின்ராசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
குற்றவாளி கைது:
கொலையை செய்துவிட்டு தலைமறைவான முருகேசன், தானாக முன்வந்து பனையப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்ற நடவடிக்கைக்கு பின் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.