Gas Cylinder (Photo Credit: Pixabay)

அக்டோபர் 01, புதுடெல்லி (New Delhi): சமையல் எரிவாயுக்கான விலையை ஒவ்வொரு மாதமும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள், மாதத்தின் முதல் தேதியில் நிர்ணயம் செய்து வருகிறது. உலகளவில் கச்சா எண்ணெய் பயன்பாடு, உற்பத்தி செலவு, போர்ப்பதற்ற சூழல் உட்பட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு எரிவாயுக்களுக்கான விலை என்பது நிர்ணயிக்கப்படுகிறது. இதில் வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை என்பது பெருமளவு ஒவ்வொரு மாதமும் கவனிக்கப்படுகிறது. Solar Eclipse 2024: இந்த ஆண்டின் இறுதி சூரிய கிரகணம்... வானின் விந்தைகளை காணத்தவறீடாதீங்க..!

வீட்டு சமையல் சிலிண்டர் விலையில் மாற்றமில்லை:

இந்நிலையில், வீட்டு சமையலுக்கான 14 கிலோ எடை கொண்ட எரிவாயு விலை ரூ.818.50 என்று மாற்றமே இல்லாமல் நீடித்து வருகிறது. அதேவேளையில், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடந்த மாதத்தை விட ரூ.48 உயர்ந்து, ரூ.1903 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ரூ.1855 க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர், தற்போது ரூ.48 உயர்ந்து இருக்கிறது.