12-Year-Old Boy Dies: ஊஞ்சல் கட்டி விளையாட்டு; பீரோ கவிழ்ந்து 12 வயது சிறுவன் பரிதாப பலி.. இராமநாதபுரத்தில் சோகம்.!

சிறார்களுடன் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், பீரோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Crime Scene File Pic (Photo Credit: Pixabay)

டிசம்பர் 30. திருவாடானை (Ramanathapuram News): இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை (Tiruvadanai), நம்புதாளை படையாட்சி தெருவில் வசித்து வருபவர் விஜய். இவரின் மகன் மனோஜ் (வயது 12). சிறுவன் தொண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், ஆறாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இதே பகுதியில் சிறுவனின் உறவினர்கள் வசித்து வரும் நிலையில், உறவினர் ஒருவரின் வீட்டில் மனோஜ் மற்றும் சில குழந்தைகள் விளையாடி வந்துள்ளனர்.

சிறுவனின் மீது விழுந்த பீரோ:

அச்சமயம், வீட்டில் இருந்த அறையில், மரத்தினால் செய்யப்பட்ட பீரோ - ஜன்னல் இடையே ஊஞ்சல் கட்டி விளையாடி இருக்கின்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக மர பீரோ சாய்ந்து இருக்கிறது. சாய்ந்த பீரோ மனோஜின் வீடு விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் உடல் நசுங்கி படுகாயமடைந்த சிறுவன், அலறி இருக்கிறார். Rain Alert: காலை 10 மணிவரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்.! 

பரிதாப மரணம்:

அவரின் அபயக்குரல் கேட்டு வந்த உறவினர்கள், சிறுவனை மீட்டு மதுரையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அங்கு சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த தொண்டி காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.