நவம்பர் 30, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, டிச.30ம் தேதியான இன்று (Today Weather) இடங்களிலும், புதுவை - காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (Tomorrow Weather) தெந்தமிழகத்தில் சில இடங்களிலும் , வடதமிழகத்தில் ஓரிரு இடத்திலும் மழைக்கான வாய்ப்புகள் உள்ளதுஎன சென்னை வானிலை (Weather) ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. வானிலை: அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் வானிலை நிலவரம்; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
அடுத்த 3 மணிநேரத்திற்கான மழை முன்னறிவிப்பு:
இந்நிலையில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருவாரூர், இராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு, காலை 10 மணிவரையில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.