Sivagangai Crime: மூதாட்டி, 40 வயது நபர் கொல்லப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளி கைது., அதிரடி காண்பித்த அதிகாரிகள்.!

இவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Crime Scene File Pic (Photo Credit: Pixabay)

நவம்பர் 06, கீழவாணியங்குடி (Sivagangai News): சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழவாணியங்குடி, கீழத்தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 40). இவர் பணம் கொடுக்கல் - வாங்கல் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை மாலை நேரத்தில், கீழவாணியங்குடி ஊரணியில் நண்பர் அருண்குமார் (வயது 35), ஆதிராஜன் (வயது 32) ஆகியோருடன் பேசிக்கொண்டு இருந்தார்.

கும்பலால் வெட்டிக்கொலை:

அச்சமயம் அங்கு வந்த கும்பலொன்று, மூன்று நபர்களையும் சரமாரியாக அரிவாள் கொண்டு வெட்டியது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பிற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பாக சிவகங்கை நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், வழக்கில் தொடர்புடையோரை விரைந்து கைது செய்ய தனிப்படையும் அமைக்கப்பட்டது. சுயதொழில் தொடங்க விரும்புவோருக்கு அருமையான வாய்ப்பு; தமிழ்நாடு அரசு சார்பில் பயிற்சி.. விபரம் இதோ.! 

முக்கிய குற்றவாளி கைது:

தனிப்படை காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 10 பேர் சேர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமானது. அதிரடியாக விசாரணை நடத்தி, கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கீழக்குளம் கிராமத்தில் வசித்து வரும் தவம் @ முத்துராமலிங்கம் (வயது 41) என்பவர் கைது செய்யப்பட்டார்.

மூதாட்டி கொலையிலும் தொடர்பு:

அவரிடம் நடந்த விசாரணையில், தவம் மணிகண்டனை கொலை செய்தது போல, களத்தூர் கிராமத்தில் வசித்து வந்த லட்சுமி என்ற மூதாட்டியையும் கொலை செய்துள்ளது உறுதியானது. கைதான தவத்திடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.