Cannabis Gang Atrocity: "சித்தப்பாவே செத்துட்டாரு, ஓசில சோறு கொடு": கஞ்சா போதையில் பேக்கரி, ஓட்டல், கறிக்கடையில் அடாவடி செய்த கும்பல்..!
உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக கடைகடையாக சென்று கடையை அடைக்கச்சொல்லி மிரட்டல் விடுத்தது, அவர்களிடம் இருந்து பணம் மற்றும் உணவுகளையும் பெற்றுக்கொண்டு கும்பல் செய்த சேட்டை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 11, திருவள்ளூர் (Tiruvallur Crime News): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடம்பத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் மயில்வேல். இவர் சமையல் மாஸ்டர் ஆவார். இவர் திடீரென உயிரிழந்ததை தொடர்ந்து, அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள உறவினர்கள் வந்திருந்தனர். மாஸ்டரின் சகோதரர் மகன், உள்ளூரில் ரௌடி என வலம்வந்த பாபா வினோத், நண்பர்கள் முகிந்தர், பிரவீன் ஆகியோரும் அங்கு இருந்துள்ளனர். இவர்கள் அங்கிருக்கும் கடைகளை அடைக்கச்சொல்லி ரகளையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
போதை இளைஞர் குழுவின் அட்டகாசம்: கஞ்சா போதைக்கு அடிமையான கும்பல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாரிமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ முருகன் பேக்கரி கடைக்கு சென்று, கடையை அடைக்கச்சொல்லி பிரச்சனை செய்துள்ளது. அரிவாளால் பொருட்களை சூறையாடி, பெண் ரூ.1000 கொடுத்ததும் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதுகுறித்து புகார் அளித்தால் கொலை செய்து விடுவோம் எனவும் பேக்கரியை நடத்திவந்த பெண்ணை மிரட்டி சென்றுள்ளது.
ஓசி சோறுக்கு மறைந்த சித்தப்பாவின் பெயர்: அங்கிருந்து இளஞ்சேரி பகுதியில் செயல்பட்டு வரும் தாபாவுக்கு சென்று மூக்கு முட்ட அசைவ உணவுகளை சாப்பிட்ட கும்பல், பார்சலும் கட்டிக்கொண்டு இருக்கிறது. பில் தொகையான ரூ.840ஐ கும்பலிடம் கேட்டபோது, "சித்தப்பா இறந்துவிட்டார், வருத்தத்தில் இருக்கிறோம். எங்களிடமே பணம் கேட்கிறாயா?" என கேள்விகளை எழுப்பி உணவக பணியாளரை வெட்டவும் செய்துள்ளது. Chennai Floods Netizens Reaction: சென்னை மழைநீர் வடிகால் திட்ட விவகாரம்: தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினை கலாய்க்கும் நெட்டிசன்கள்.! காரணம் என்ன?..!
கடையை மூடும் நேரத்தில், கடையை மூடச்சொல்லி ரகளை: மேலும், நரசிங்கபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த கறிக்கடையை மூடுமாறு ரகளை செய்து, உரிமையாளர் வினோத் குமாரையும் அரிவாளால் வெட்டி இருக்கின்றனர். கடையை மூடும் நேரத்தில் 9 மணிக்கு வந்து இக்கும்பல் ரகளை செய்திருக்கிறது. இந்த விஷயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை: புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து, கஞ்சா கும்பலுக்கு வலைவீசி பிரவீன் என்பவரை கைது செய்தனர். முகிந்தர் மற்றும் பாபா ஆகியோரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். கஞ்சா போதையில் சுற்றும் ரௌடிகளை காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வருகின்றனர்.