டிசம்பர் 10, சென்னை (Chennai): கடந்த டிசம்பர் 05ம் தேதி ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மசூலிப்பட்டினம் - நெல்லூர் இடையே கரையை கடந்த மிக்ஜாங் (Michaung Cyclone) புயலின் தாக்கம், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கோரத்தாண்டவத்தை வெளிப்படுத்தியது. புயல் சென்னையில் கரையை கடைக்காதபோதியிலும், சென்னையை ஒட்டிய கடற்கரை வரை நெருங்கி வந்தது.
ஏரிகள் உடைப்பு, எங்கும் வெள்ளம்: புயலின் மழைகொடுக்கும் மேகங்கள் கரையை கடப்பதற்கு முன்பு டிசம்பர் 03 மற்றும் 04ம் தேதிகளில் சென்னை (Chennai Rains) நகரில் பெய்த உச்சபட்ச மழையளவின் காரணமாக, நகரமே வெள்ளத்தில் தத்தளிக்க தொடங்கியது. சென்னையின் பிரதான நகர்ப்புற பகுதிகள் வெள்ளத்தின் பிடியில் சிக்கின. பள்ளிக்கரணை பகுதியில் இருந்த ஏரியில் கரை உடைந்து வெள்ளம் ஊருக்குள் புகுந்தது.
98% பணிகள் முடிந்ததாக அமைச்சர் பேட்டி: புயல் வருவதற்கு முன்பு, கடந்த நவம்பர் 04ம் தேதி அன்று தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என் நேரு (Minister K.N Nehru) செய்தியாளர்கள் சந்திப்பில், "ஒரேநாளில் 20 செ.மீ அளவில் மழை பெய்தாலும் சென்னை நகரில் நீர் தேங்காது. ஆனால், நீர் தேங்கினாலும் ஒருமணிநேரத்தில் அவை வெளியேற்றப்படும். ரூ.4,000 கோடி மதிப்பீட்டில், 98% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்றுள்ளன" என தெரிவித்தார். Karnataka Shocker: பணப்பிரச்னையால் விபரீதம்: குழந்தையை கொலை செய்து தம்பதி தற்கொலை.. தனியார் ரிசார்ட்டில் நடந்த சோகம்.!
Last month, DMK Minister Thiru KN Nehru exclaimed that 98% of works related to the Stormwater drains are completed & are capable of draining out 20 cm of rain within an hour.
However, today's news reports claim that Thiru KN Nehru confirmed that only 42% of Stormwater drains… pic.twitter.com/RC2diB1BPR
— K.Annamalai (@annamalai_k) December 8, 2023
சூரிய உதயத்தை கண்ட மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி: ஆனால், மழை பெய்த 2 நாட்களில் அதிகபட்சமாக ஒரே நாளில் 30 செ.மீ மழை பெய்திருந்தது. 49 ஆண்டுகளில் இல்லாத அளவு சென்னையில் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையமும் தெரிவித்தது. இதனையடுத்து, டிசமபர் 03 மற்றும் 04 தேதியில் புயலின் மழையை எதிர்கொண்ட மக்கள், டிசம்பர் 05ம் தேதி சூரிய உதயத்திற்கு பின்னர் தான் அவர்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கிய தருணம் அம்பலமானது.
களமிறங்கிய அரசு இயந்திரம்: இதனையடுத்து, அரசு இயந்திரம் முழுவீச்சில் களப்பணியை தொடங்கினாலும், பல இடங்களில் வெள்ள நீர் 2015 போல சூழ்ந்துகொண்டு மக்களை தத்தளிக்க வைத்தது. களத்தில் அமைச்சர்கள் மீட்பு பணிகளில் முடுக்கிவிடப்பட்டனர். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் பிரியா, மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுக்கள் பகுதி வாரியாக பிரிந்து தொடர் மீட்பு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணிகளில் ஈடுபட்டது.
அமைச்சரின் மாறுபட்ட பேச்சு: மக்களின் நிலைமை கண்களில் இருந்து நீரை வரவழைக்கும் வண்ணம் இருந்தன. இறுதியாக அமைச்சர் கே.என் நேரு இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தபோது, "சென்னையில் மாநகர மழைநீர் வடிகால் திட்டத்திற்காக ரூ.5,166 கோடிகள் ஒதுக்கப்பட்டது. இதில், ரூ.2,191 கோடியே செலவிடப்பட்டுள்ளது" என தெரிவித்தார். இவற்றில் 48% பணிகள் மட்டும் முடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். Top 5 Tourist Places in Tamilnadu: கட்டாயம் தமிழகத்தில் பார்க்க வேண்டிய 5 சுற்றுலாத்தலங்கள்: அரையாண்டு விடுமுறைக்கு தயாராகும் மாணவர்களே.. லிஸ்ட் இதோ..!
எதிர்க்கட்சிகள் விமர்சனம்: முன்னதாக அரசு மழைநீர் வடிகால் பணிக்காக ரூ.4,000 கோடி செலவிடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அடுத்த மாறுபட்ட பேச்சுக்கள் குளறுபடியை ஏற்படுத்தின. இது எதிர்கட்சிகளான அதிமுக, பாஜக ஆதரவாளர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்றது. தமிழ்நாடு அரசு மழை, வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.5,000 கோடி மத்திய அரசிடம் கேட்டு கோரிக்கை வைத்த நிலையில், மத்திய அரசு ரூ.500 கோடி முதற்கட்டமாக வழங்கியது.
புரிஞ்சவன் பிஸ்தா, பாதாம், முந்திரி எல்லாம் 😂😂😂#நக்கிட்டு_போன_4000_கோடி pic.twitter.com/d1yXr4DSVJ
— ArunmozhiVarman 🕉🚩🇮🇳🛕🎻 (@Arunmozhi_Raaja) December 9, 2023
வைரலாகும் முதல்வரின் முகத்தை ஒத்த புகைப்படம்: இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் சென்னை பெருநகர வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று, முதல்வர் மு.க ஸ்டாலினின் உருவத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் படமாக்கப்பட்டு, எக்ஸ் (ட்விட்டர்) பயனரால் புரிந்தவர் பிஸ்தா, பாதாம் என்ற பெயரில் கலாய்க்கும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த ட்விட் பதிவில் நக்கிட்டு போன 4,000 கோடி (Rs. 4000 crores that have been licked) எனவும் ஹாஷ்டேக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவுகள் தேசிய அளவில் வைரலாகி இருக்கின்றன.
எதிர்ப்பு கருத்துக்கள்: ரூ.4,000 கோடி பணத்தை அரசு சரியான வகையில் பயன்படுத்தவில்லை. அரசின் செயல்பாடுகள் சென்னை மழைநீர் வடிகால் விவகாரத்தில் சரியாக இல்லை. அதனை உறுதிப்படுத்தும் வகையில் வெள்ளம் சென்னையை ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. இதனால் மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட ரூ.4,000 கோடி நீர்த்துப்போனது என எதிர்கட்சியினரும், அவர்கள் சார்ந்த நெட்டிசன்களும் தங்களின் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
ஆளுங்கட்சி அமைச்சர்களின் பதில்: அரசின் மீது வைக்கப்பட்ட பல்வேறு விமர்சனங்களுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்ட அமைச்சர்கள், முதலில் எதிர்பாராமல் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட மக்களை கவனிக்கலாம். அவர்களுக்கு தேவையானதை செய்யலாம். மழை வெள்ளத்தை வைத்து அரசியல் செய்ய நினைப்பது அபத்தனமானது எனவும் தங்களின் கருத்தை முன்வைக்கின்றனர். திமுகவினரும் எதிர்க்கட்சிகளின் மேற்கூறிய விமர்சனத்திற்கு பதில் அளித்து வருகின்றனர்.
அரசின் நிதிஉதவி: தமிழ்நாடு அரசு மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.6,000/- நிதிஉதவி, சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.8,000/-, பயிர்கள் இழப்பீடும் ஹெக்டேருக்கு ரூ.8,000/-, ஆடுகள் இறந்திருந்தால் தலா ரூ.4,000/-, சேதமடைந்த படகுகள், வேலைகளுக்கு ரூ.15,000/-, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5,00,000/-, மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.17,000/-, எருது, பசு கால்நடைகள் உயிரிழந்தால் ரூ.37,500/-, மரங்கள், பல்லாண்டு பயிர்கள் இழக்கப்பட்டு இருந்தால் ஹெக்டேருக்கு ரூ.22,500/-, முழுமையாக சேதமடைந்த படகுகள், வேலைகளுக்கு ரூ.50,000/- நிதிஉதவி அறிவிக்கப்பட்டுள்ளது.