Thiruvarur Shocker: கர்ப்பிணி பெண் அதிக இரத்தப்போக்கால் உயிருக்கு போராடி பலி; திருவாரூரில் கண்ணீர் சோகம்.!

தனியார் மருத்துவமனையின் அலட்சியமான சிகிச்சை காரணமாக தங்களின் மகள் உயிரிழந்துவிட்டதாக பெற்றோர்கள் குற்றசாட்டு முன்வைத்துள்ளனர்.

Thiruvarur Pregnant Women Dies on 20-Oct-2024 (Photo Credit: @PolimerNews X / Pixabay)

அக்டோபர் 21, ஆம்பூர் (Thiruvarur News): திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் வசித்து வருபவர் பருவதம். இவரின் மனைவி ஜெமினா மேரி. இவரின் மகள் செபஸ்டினா (வயது 35). இவர் கூத்தூர் பகுதியில் அஞ்சலக பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் - பெருமுனை, கோவில்பத்து கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

மருத்துவமனையில் (Pregnant Woman Dies after Delivery) அனுமதி:

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவருக்கும் 6 வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறார். இதனிடையே, சமீபத்தில் கருத்தரித்து இருந்த செபஸ்டினா, இரண்டாவது பிரசவத்திற்காக திருவாரூர் கமலாலயம், மேல்கரை பகுதியில் செயல்பட்டு வரும் வெங்கடேஸ்வர் கருத்தரிப்பு மையத்தில் உள்நோயாளியாக அனுமதி செய்யப்பட்டுள்ளார். Vijaya Prabhakaran: ஹிந்தி படி, படிக்காதான்னு இரு தரப்பு.. நாம செய்ய வேண்டியது என்ன?.. தேமுதிக விஜய பிரபாகரன் பளீச் பேச்சு.! 

அதிக இரத்தப்போக்கு:

அங்கு அவருக்கு சிகிச்சையில் அனுமதியான செப்.7 அன்றே குழந்தையும் பிறந்துள்ளது. அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே, அவருக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறி மருத்துவமனை நிர்வாகம் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க அனுப்பி வைத்துள்ளது. அங்கு பெண்ணுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இரத்தப்போக்கை நிறுத்த மற்றொரு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.

காவல்நிலையத்தில் புகார்:

இதனால் பெண்ணின் சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு, கடந்த 13 நாட்களுக்கும் மேலாக தொடர் சிகிச்சையில் இருந்தவர், நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த உறவினர்கள், கண்ணீருடன் மருத்துவமனை வளாகத்திற்கு முன்பு கூடியதால் பரபரப்பு சூழல் உண்டாகியது. அங்கு வந்த காவல்துறையினர் சமாதானப்பேச்சுவார்தை நடத்தி, புகார் அளிக்குமாறு அறிவுறுத்தி இருக்கின்றனர்.

மருத்துவமனை விளக்கம்:

இந்த விஷயம் குறித்து பாண்டியன் திருவாரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் மரணம் குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் கூறுகையில், "சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சையின்போது அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை அளிக்க வசதி இல்லை என்பதால், மேற்படி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம்" என தெரிவித்துள்ளார்கள்.