Amonia Leak: மீன் பதன ஆலையில் அமோனியா வாயுக்கசிவு; 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. தூத்துக்குடியில் அதிர்ச்சி.!

பெண்கள் திரளாக பணியாற்றி வந்த மீன் பதன ஆலையின் கிட்டங்கியில் திடீரென அமோனியா வாயு கசிந்த சம்பவம் நடந்துள்ளது.

Poison Gas (Photo Credit : Pixabay)

ஜூலை 20, தூத்துக்குடி (Thoothukudi News): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டையபுரம் சாலை, டாவிஸ்புரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலா சீ புட்ஸ் (Nila Sea Foods) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் தினமும் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அமோனியா சிலிண்டர் ஒன்றும் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் இருந்து அமோனியா வாயு கசிந்து இருக்கிறது. Minor Girl Gang Rape: இன்ஸ்டாகிராம் பழக்கம்; 13 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்கள்..!

காவல்துறையினர் விசாரணை:

இதனால் ஆலையில் பணியாற்றிக்கொண்டு இருந்த 30 க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் உட்பட உடலநலக்குறைவை சந்தித்து மயக்கம் அடைந்தனர். இதனையடுத்து, அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட 30 பேரில் 29 பேர் பெண் ஊழியர்கள் ஆவார்கள். இதனால் அவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் கண்ணீருடன் குவிந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவலதுறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.