Petrol Bombing: 'அமரன்' படம் திரையிட்ட, நெல்லை அலங்கார் சினிமாஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; காவல்துறை விசாரணை.!

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் காட்சிப்படுத்தப்படும் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

Amaran Movie | Nellai Alankar Cinemas (Photo Credit: @mahajournalist X)

நவம்பர் 16, மேலப்பாளையம் (Tirunelveli News): கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷ்னல் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, புவன் அரோரா, ராகுல் பாஸ் உட்பட பலர் நடிப்பில், கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியான திரைப்படம் அமரன் (Amaran). படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து இருந்தார். மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை வரலாறு படமாக எடுக்கப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயனின் வாழ்க்கையில் மிகப்பெரிய மைல் கல்லாகவும் அமரன் திரைப்படம் அமைந்துள்ளது. எனினும், ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற நிகழ்வுகளின் பின்னணியை படம் கொண்டிருப்பதால், ஒருதரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. Jayam Ravi-Aarti Divorce: ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு.. சமரச பேச்சுவார்த்தை நடத்தச் சொன்ன நீதிமன்றம்..!

நெல்லை அலங்கார் திரையரங்கம்:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் அலங்கார் சினிமாஸ் (Alankar Cinemas) செயல்பட்டு வருகிறது. இந்த திரையரங்கத்தில் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் திரையிடப்பட்டு இருந்த நிலையில், மக்கள் பலரும் படம் பார்த்துச் சென்றனர். அமரன் படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அளவில் ஒரு கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், அக்குழுவினர் அலங்கார் திரையரங்கம் முன்பும் சமீபத்தில் போராட்டம் நடத்தி இருந்தனர். 15,000 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு; அரியலூரில் ரூ.1000 கோடி செலவில் பிரம்மாண்ட காலணி உற்பத்தி தொழிற்சாலை.! 

நல்வாய்ப்பாக சேதம் இல்லை:

இந்நிலையில், நேற்று இரவு அங்கு வந்த மர்ம நபர், திரையரங்கு வளாகத்தில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றார். நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் எவ்வித காயமோ, பொருட்சேதமோ இல்லை. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திரையரங்கு வளாகத்தில் காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க அம்மாவட்டத்தில் காவல்துறையினர் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசி சென்ற மர்ம நபருக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட திரையரங்க வளாகம்: