நவம்பர் 15, ஜெயங்கொண்டம் (Ariyalur News): தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (15.11.2024) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் ஜெயம்கொண்டம் (Jayankondam SIPCOT) தொழிற்பூங்காவில், தைவான் நாட்டைச் சேர்ந்த டீன்ஷுஸ் நிறுவனம் 1,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்கவுள்ள காலணிகள் உற்பத்தித் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். Girl Sexually Harassed: 25 வயது இளம்பெண் பலாத்கார முயற்சி; வீட்டுக்கு அழைத்து கோவை பேராசிரியர் பகீர் செயல்..!
பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை:
தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மாற்றம் பெறுவதற்கும் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழில் ரீதியாக பின்தங்கிய மாவட்டமான அரியலூரில், சிப்காட் ஜெயம்கொண்டம் தொழில் பூங்காவில் காலணி உற்பத்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு:
அரசின் ஒத்துழைப்புக்கேற்ப, அரியலூர் மாவட்டம், சிப்காட் ஜெயம்கொண்டம் தொழில் பூங்காவில், உடையார்பாளளையம் தாலுகாவில் ஜெயம்கொண்டம் - விருத்தாசலம் சாலையில் டீன்ஷூஸ் நிறுவனத்திற்கு காலணி உற்பத்தி தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தமிடப்பட்டது. இன்று 1000 கோடி ரூபாய் முதலீட்டில், 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.