Nigar Shaji: "பெண்களுக்கு பல பகுதிகளில் தற்போதும் அதிகாரம், அனுமதி இல்லாமல் இருந்து வருகிறது" இஸ்ரோ விஞ்ஞானி நிஹார் சாஜி பேச்சு..!
தான் பெண் என்ற காரணத்தால் படிப்பில் இயந்திரவியல் துறைக்கான பாடத்தை தேர்வு செய்ய முடியாத நிலை உருவானது என இஸ்ரோ விஞ்ஞானி நிஹார் சாஜி மனம் திறந்து பேசியுள்ளார்.
ஜூலை 29, நெல்லை (Nellai News): நெல்லை பகுதியில் அமைந்துள்ள மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு இஸ்ரோ விஞ்ஞானி நிஹார் சாஜி (ISRO Scientist Nigar Shaji) மனம் திறந்து பேசியுள்ளார். அங்கு பேசிய அவர், "பெண்களுக்கு பல பகுதிகளில் தற்போதும் அதிகாரம் மற்றும் அனுமதி இல்லாமல் இருந்து வருகிறது. தான் பெண் என்ற காரணத்தால் படிப்பில் இயந்திரவியல் துறைக்கான பாடத்தை தேர்வு செய்ய முடியாத நிலை உருவானது. பெண்களின் திறன் மற்றும் மேம்பாட்டின் மூலமே இந்தியா வளர்ந்த நாடாக மாற முடியும். நமது நாடு பல்வேறு உலகத் தரம் வாய்ந்த ராக்கெட் திட்டங்களை உருவாக்கி வருகிறது. தேவாலயம் அறிவியல் ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டு அதன் மூலம் பல்வேறு சாதனைகள் நிகழ்ந்துள்ளது. சமூகத்தின் வடிவமைப்பை மதம், ஆன்மீக அமைப்பின் சிறந்த கூறுகளால் மாற்ற முடியும்" என்று தெரிவித்தார். International Tiger Day 2024: "புலி புலி புலி.. அட அச்சம் விட்டு உச்சம்தொட்டு வெற்றி பெறும் வீரப்புலி" சர்வதேச புலிகள் தினம்..!
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியை சேர்ந்த நிகர் சாஜியின் இயற்பெயர் நிகர் சுல்தானா. இவர் பள்ளி காலத்திலிருந்தே படிப்பில் கெட்டிக்காரராக இருந்து இருக்கிறார். நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் படித்த அவர், படிப்பை நிறைவு செய்த பின் இஸ்ரோவில் அவருக்கு பணி கிடைத்தது. அமெரிக்காவில் அமைந்து இருக்கும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு சென்று நிகர் சாஜி விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான கூடுதல் அனுபவங்களை பெற்று இருக்கிறார்.