Karur Aged Couple Killed: மாந்தோப்பில் வயதான ஜோடி கொடூர கொலை; நகை, பணம் திருட்டு..! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
தோட்டத்தில் தனியே இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டு, அவர்களின் நகை-பணங்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சமபவம் நடந்துள்ளது.
மே 22, கரூர் (Karur Crime News): கரூர் மாவட்டத்தில் உள்ள செங்குந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் சரவணகுமார். இவர் தொழிலதிபர் ஆவார். அங்குள்ள வாங்கல் ஓடையூரில் சரவணகுமாருக்கு சொந்தமாக மாந்தோப்பு உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூர், பெருமாள்காட்டுப்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 64).
இவர் மாந்தோப்பை குத்தகைக்கு எடுத்து விவசாய பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதனால் கடந்த 15 ஆண்டுகளாக தனது மனைவி மயிலியோடு தோட்டத்திலேயே தங்கியிருந்து விவசாய பணிகளை மேற்கொண்டுள்ளனர். தம்பதிகள் தங்க தோட்டத்திலேயே குடிசை வீடு அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு சமையல் பணிகள் முடிந்ததும் தம்பதி சாப்பிட்டு குடிசையில் உறங்கியுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் குடிசையின் கதவை தட்டவே, தங்கவேல் கதவை திறந்துள்ளார். அப்போது உள்ளே புகுந்த கொள்ளையர்கள், மிளகாய் பொடிதூவியுள்ளனர். Sarath Babu Died: நடிகர் சரத் பாபு இயற்கை எய்தினார்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
கன்னிகாமிக்கும் நேரத்தில் பயங்கர ஆயுதத்தால் சரமாரி தாக்குதல் நடத்தப்படவே, நிலைகுலைந்த தம்பதி அங்கேயே பரிதாபமாக மயங்கி விழுந்து உயிரிழந்தனர். கொள்ளையர்கள் தம்பதியிடம் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து அங்கிருந்து சென்றனர்.
தோப்பில் தம்பதிகளின் நடமாட்டம் இல்லாததால், கிராமத்தில் இருக்கும் நட்பு வட்டாரத்தினர் அவர்களை சந்திக்க சென்றுள்ளனர். அப்போது, இருவரும் இரத்த காயத்துடன் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடையவே, வாங்கல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடரும் நிலையில், இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)