Hosur Violence: எருதுவிடும் திருவிழாவுக்கு அனுமதி கேட்டு கிருஷ்ணகிரி - ஓசூர் சாலை முடக்கம்.. 200 பேர் கைது., காவல்துறை குவிப்பு..!
தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை காமன் தொட்டி கிராமத்தில் நிலவி வருவதால் கூடுதல் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிப்ரவரி 02, காமன்தொட்டி: கிருஷ்ணகிரி (Krishnagiri) மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையடுத்து (Pongal Celebration) எருது விடும் திருவிழா அங்கு விமர்சையாக நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகத்திடம் (District Administration) முறையான அனுமதி பெற்று எருது விடும் திருவிழா நடத்தவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஓசூர் (Hosur) கோபசந்திரம், சின்ன திருப்பதி (Chinna Tirupati) கோவில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது.
இதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாத நிலையில், அங்குள்ள காலி இடத்தை சீரமைத்து தடுப்புகள், மேடைகள் அமைத்து விழாக்குழு சார்பில் ஏற்படுகள் செய்யப்பட்டு இருந்தன. அங்கு 100 க்கும் மேற்பட்ட காளைகள் வரவழைக்கப்படவே, இளைஞர்களும் அங்கு திரண்டு காணப்பட்டனர். இந்த தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினர் (Hosur Police) நிகழ்விடத்திற்கு விரைந்தனர். Bihar Excise Principal Secretary Issue: நிர்வாக சேவை சங்கத்தினர் கூட்டத்தில் காதில் கேட்க முடியாத வார்த்தையால் திட்டித்தீர்த்த முதன்மை செயலாளர்..!
மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காததால் அங்கிருந்தவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். ஆனால், இளைஞர்கள் ஆத்திரமடைந்து கிருஷ்ணகிரி - ஓசூர் சாலையில் கற்களை குவித்து போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். அவ்வழியே சென்ற வாகனங்களின் மீதும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனையடுத்து, காவல் துறையினர் தடியடி நடத்தி அங்கிருந்தோரை விரட்டினர். இளைஞர்களின் போராட்டத்தை தொடர்ந்து எரித்துவிடும் திருவிழாவுக்கு அனுமதி வழங்கினாலும், மாவட்டம் முழுவதும் அனுமதி வழங்கப்படவேண்டும் என போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனால் காவல் துறையினர் தடியடியும் நடத்தி வருகின்றனர்.
கூடுதல் காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பனி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் காமன்தொட்டி பகுதிக்கு விரைந்துள்ளனர்.